Viral video: தொட்டு பாருலே! சிங்கத்தை சம்பவம் செய்த வரிக்குதிரை

வேட்டையாடிக் கொண்டிருந்த சிங்கத்தை, வரிக்குதிரை ஒன்று துரத்தியடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 9, 2022, 06:35 PM IST
  • சிங்கத்தை துரத்திய வரிக்குதிரை
  • மற்றொரு வரிக்குதிரையை காப்பாற்றியது
  • சோகத்துடன் இருக்கும் சிங்கத்தின் வீடியோ
Viral video: தொட்டு பாருலே! சிங்கத்தை சம்பவம் செய்த வரிக்குதிரை title=

காட்டு ராஜாவான சிங்கம் பிற விலங்குகளை வேட்டையாடி தான் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சிங்கமே அடி வாங்குவதை பார்த்திருக்கிறீர்களா?. உணவுக்காக வேட்டையாடும் செல்லும் சிங்கம், இரையாக தனியாக மேய்ந்து கொண்டிருந்த வரிக்குதிரை ஒன்றை தேர்ந்தெடுக்கிறது. அந்த வரிக்குதிரையை சரியான நேரம் பார்த்து கழுத்தில் பிடித்து வேட்டையாடும் சிங்கம், பின்னால் இருக்கும் மற்றொரு வரிக்குதிரையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் படிக்க | Viral Video: சேவல் முதுகில் ஒய்யாரமாக சவாரி செய்யும் பூனை

பொதுவாக சிங்கம் வேட்டையாடும்போது, மற்ற விலங்குகள் ஓடிவிடும். ஆனால், இங்கு சிங்கம் வேட்டையாடும்போது வரிக்குதிரையுடன் இருக்கும் மற்றொரு வரிக்குதிரை ஓடவில்லை. மாறாக சிங்கத்தை எதிர்த்துவிட வேண்டும் என்ற துணிவில் இருக்கிறது. வேட்டையாடிய வரிக்குதிரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சிங்கத்தை, பின்னால் இருந்து கம்பீரமாக எதிர்க்கிறது வரிக்குதிரை. அதாவது, வேட்டை வரிக்குதிரையை சிங்கம் கொல்ல முயற்சிக்கும்போது நொடிப்பொழுதுகூட தாமதிக்காமல் தனியாக நின்று கொண்டிருந்த வரிக்குதிரை வந்து தாக்குகிறது. சிங்கத்தை தாக்கி வரிக்குதிரையை காப்பாற்ற முயற்சிக்கிறது.

அதற்காக சிங்கத்தை தன் கால்களால் எட்டி உதைத்து வரிக்குதிரையின் மீதான பிடியை தளர்த்த வைக்கிறது. வரிக்குதிரையின் இந்த முயற்சிக்கு ஒரு கட்டத்தில் வெற்றியும் கிட்ட, சிங்கம் கடும் கோபத்துடன் மீண்டும் வேட்டைக்கு முயற்சிக்கிறது. அந்த நேரத்தில் இரு வரிக்குதிரைகளும் தங்களின் பின்னங்கால்கள் மூலம் சிங்கத்தை எட்டி உதைத்துவிட்டு வேகமாக ஓடிவிடுகின்றன. சிங்கத்தால் உடனடியாக அவற்றை சேஸிங் செய்ய முடியவில்லை. முடிவில் இரைபோன வருத்தத்தில் இருக்கிறது சிங்கம். இப்படி சிங்கம் அடி வாங்கும் வீடியோவை இணையவாசிகள் வெகுவாக ரசித்துள்ளனர். டிவிட்டரில் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | Cow Arrested: கொலைக்குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News