வைரல் வீடியோ: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் பாம்பு வீடியோ வெளியானால் அவை வைரலாகின்றன. இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு நாம் தினமும் காணும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்கள் பிரபலமாகின்றன.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் தினசரி வாழ்வில் நாம் பார்க்காதவைகளாக இருக்கும்போது, அவை வைரலாகின்றன. சில சமயங்களில் அந்த வீடியோக்கள், உண்மையானதாக இல்லாமல், புனையப்பட்டதாக இருந்தாலும் வைரலாவதற்கும் அதுவே காரணம்.
சில சமயம் சிரிக்க வைக்கும் வீடியோக்கள், வேறுசில சமயம் சிந்திக்கவும் வைக்கின்றன. ஒரு சமயத்தில் ஆச்சரியப்பட வைத்தால், மற்றொரு சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோக்கள், சில சமயம் சோகத்தையும் ஏற்படுத்துகின்றன.
சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாக வைரலாகும் ஒரு வீடியோவில், பாம்பு ஒன்று நீந்தி பட்டையை கிளப்பி வருகிறது. அந்த சுவாரசியமான வீடியோ Snake World என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க | பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ
தற்போது வெளியாகியுள்ள வீடியோ-வில் ராட்சத பாம்பு ஒன்று கடலில் நீந்தி வருவதை பார்க்க முடிகிறது. கடலின் நீல நிற நீரில், பளிச்சென்ற நிறத்தில்அங்கும் இங்கும் அலைவதைப்போல, நீந்தி வருவதைக் காணமுடிகிறது. இந்த வீடியோவை ஒரு படகு அல்லது கப்பலில் இருந்து எடுத்திருப்பதாக தெரிகிறது.
பல அடி நீளமுள்ள இந்த நாகம் கடலில் நீந்தி, கலத்தில் ஏறுமோ என்று ஆர்வத்துடன் பார்க்க நம்மைத் தூண்டுகிறது. தொலைவில் இருந்து அருகில் வரும் பாம்பு, மெல்ல மெல்ல நீந்தி நெருங்கும்போது, இனி என்ன செய்யும், மனிதனின் கையில் ஏறுமோ என்று நினைக்க வைக்கிறது.
ஆனால் அந்த பாம்பு என்ன செய்கிறது. பாம்பின் வீடியோவை பார்த்தால் அதன் நீச்சல் திறமைத் தெரிந்துவிடும்.
உண்மையில் ராட்சதப் பாம்பு அருகில் நெருங்கியதும், அதன் க்ளோசப் தோற்றத்தைப் பார்த்தால் உண்மையானதாகவே தோன்றுகிறது. படகைத் தொட்டு மேலே ஏற முயலும் மஞ்சள் பாம்பு, பிறகு என்ன தோன்றியதோ, விலகிச் சென்று விட்டது.
படகில் இருப்பவர், அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே பேசுவது, பயம் அகன்றதால் தான் என்றும் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் முழு வீடியோவும் உண்மையானதா அல்லது அதில் ஒரு பகுதி புனையப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
எது எப்படியிருந்தாலும், பாம்பின் நீச்சல் வீடியோ பார்க்க பரவசமூட்டுகிறது. இது பாம்பை பார்த்து பதற்றப்படும் வீடியோவாக இல்லாமல் பரசத்தை ஊட்டும் மஞ்சள் பாம்பு வீடியோவாக, இணையத்தை கலக்கி வருகிறது.
மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR