Snake SCARE: பாம்பு பயத்தால் ஏழரை கோடி ரூபாய் இழந்த கதை தெரியுமா?

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கொல்ல முயன்ற மனிதருக்கு ஏழரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சோகக்கதை

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 09:37 AM IST
  • பாம்பை கொல்ல முயன்று வீடிழந்த மனிதன்
  • 7.5 கோடி மதிப்புள்ள வீடு சாம்பலானது
  • தலைவிதியை மாற்றிய பாம்பு பயம்
Snake SCARE: பாம்பு பயத்தால்  ஏழரை கோடி ரூபாய் இழந்த கதை தெரியுமா? title=

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது உண்மைதான். ஆனால் பாம்பு மீதான பயத்தால் அதைக் கொல்ல முயன்ற மனிதருக்கு ஏழரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 ஒருவரின் தலைவிதி எப்போது மாறும் என்று எதுவும் சொல்ல முடியாது. ஒருவர் பணக்காரனாவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம், ஆனால் அது அழிவதற்கு சில நிமிடங்கள் போதும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது.  விஷப்பாம்பை கொல்ல முயன்றால், பாம்பு நழுவிவிட்டது, ஆனால், பாம்பை சாம்பலாக்க நினைத்த மனிதரின் வீடுதான் எரிந்து சாம்பலானது என்பது அதிசயம்.  

ALSO READ | இணையத்தில் வைரலாகும் முப்பாம்புகள்!!

அமெரிக்காவின் மேரிலாந்தில் (Maryland, America) வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் பாம்பு நடமாட்டம் இருந்திருக்கிறது. இதனையடுத்து அந்த நபர் அந்த பாம்பை கொல்ல முயன்றுள்ளார் (Tried to kill the Snake). ஆனால், பாம்பை கொல்ல அவர் கொடுத்த விலை ஏழரை கோடி ரூபாய் என்பதுதான் சோகம்.

சிஎன்என் வெளியிட்ட செய்தியின்படி, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு அருகில் பாம்பு நடமாட்டத்தைப் பார்த்த நபர், தன்முன்னால் இருந்த குமிட்டி அடுப்பை (sigri which is used for warm house) பாம்பின் மீது தூக்கி வீசினார்.

ஆனால், பாம்பு நழுவி போய்விட்டது. தீ, வீடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. 75 தீயணைப்பு படையினரின் வாகனங்கள் உடனடியாக வந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டாலும், வீடு எரிந்து சாம்பலானது.

எரியும் நிலக்கரியைக் கொண்டு பாம்பை கொல்ல நினைத்தால், வீட்டை தணிப்பாக வைக்க பயன்படுத்திய அதே நிலக்கரி, வீட்டை தணலாய் தகிக்க வைத்துவிட்டது. நெருப்பு பற்றி எரிந்த வீட்டில் ஏழரை கோடி ரூபாய் நட்டமாகிவிட்டதாம்.  தீப்பிடித்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படங்களில், வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் வெளிவருவது தெரிகிறது.

Also Read | அசால்டாய் பாம்புகளை அப்புரப்படுத்தி அசர வைத்த நபரின் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News