நாய்க்குட்டியை தலையணையாக மாற்றிய கோழிக்குஞ்சுகள்! வைரலாகும் வீடியோ!

நாய்க்குட்டியை சுற்றி கோழிக்குஞ்சுகள் வட்டமிட்டு அதன் மீது அமர்ந்து விளையாடும் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 11:15 AM IST
  • நாய்க்குட்டியை சுற்றி வட்டமடிக்கும் கோழிக்குஞ்சுகள்.
  • தலையணையாக மாற்றி தூங்குகின்றன.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நாய்க்குட்டியை தலையணையாக மாற்றிய கோழிக்குஞ்சுகள்! வைரலாகும் வீடியோ! title=

இணையம் பல அற்புதங்களால் நிரம்பியுள்ளது, அந்த அற்புதங்கள் அனைத்தும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது.  நமது மனநிலையை நொடிப்பொழுதில் மாற்றியமைக்கக்கூடிய வல்லமை படைத்த பல சுவாரஸ்யமான காட்சிகள் இணையத்தளங்களில் கொட்டி கிடக்கிறது.  நம்மை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், சிந்திக்க வைக்கவும் என பல வகைவகையான வீடியோக்கள் இருக்கின்றது.  பெரும்பாலும் இணையத்தில் பலரையும் கவர்வது என்னவோ விலங்குகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் தான்.  அப்படி ஒரு விலங்கின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இப்போதெல்லாம் விலங்குகள் பலவும் மற்ற இனங்களுடன் நட்பு பாராட்ட தொடங்கிவிட்டது, இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்பொழுது நமக்கு சில சமயம் வியப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ 

நம்மை வியக்கவைக்கும் அந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது.  அந்த வீடியோவில் ஒரு நாய்குட்டியும், அதனருகில் குட்டி குட்டியாக அழகழகாக மஞ்சள் மற்றும் சிறிது கருப்பு நிறம் கலந்தாற்போல கோழிக்குஞ்சுகள் இருப்பதை  முடிகிறது.  அந்த நாய்க்குட்டி முதலில் கோழிக்குஞ்சுகளை தள்ளிவிட்டு தனக்கு படுக்க இடத்தை ஒதுக்கிக்கொண்டு கீழே மண்தரையில் படுத்து கொள்கிறது.  ஆனால் அந்த கோழிக்குஞ்சுகள் அப்போது அந்த நாய்க்குட்டியை விடாமல் அந்த நாய்க்குட்டியை சுற்றியே வட்டமிடுகிறது, அப்படியே நாய்க்குட்டியின் மீது ஏறி கோழிக்குஞ்சுகள் ஆளுக்கொரு இடமாக சொகுசாக படுத்து கொண்டும் விளையாடி கொண்டும் இருக்கின்றன.

 

இந்த காட்சி இணையாவசிகள் பலரது இதயங்களையும் கொள்ளைகொண்டுள்ளது.  ட்விட்டரில் கடந்த 23ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 15.3 மில்லியன் இணையாவசிகளில் பார்த்து ரசித்துள்ள்ளனர்.  மேலும் இந்த வீடியோவுக்கு எண்ணற்ற லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க  | ‘ஏய்.. ஃபேர்வெல்லா இது?’ மாணவர்கள் கொடுத்த வினோதமான பிரியாவிடையின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News