பாம்பை பார்த்ததும் பெரும்பாலானோர் பீதி அடையத் தொடங்குகின்றனர். பாம்புகள் பொதுவாக உருவாக்கும் ‘ஷ்...’ என்ற சத்தம் கேட்டாலே அனைவரும் உஷார் நிலைக்கு வந்துவிடுவதுண்டு. பாம்பென்றால் படையும் நடுங்கும் என அந்த காலம் தொட்டு கூறப்படுகிறது. நவீன காலத்திலும் பாம்புகள் பற்றிய பல கதைகளும், நிகழ்வுகளும், வீடியோக்களும் அவ்வப்போது சர்ச்சையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுவும் இணையத்துக்கு இணக்கமான உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. பாம்புகள் பற்றிய படங்களும் வீடியோக்களும் இணையவாசிகளை ஈர்க்காமல் இருப்பதில்லை. பாம்பு வீடியோக்களுக்கென சமூக ஊடகங்களில் தனி மவுசு இருப்பதை மறுப்பதற்கில்லை.
பாம்புகளை பார்த்தால் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள் என்றாலும், பாம்புக்கே சவால் விடும் சில வீர தீர நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகிறது. பல நேரங்களில் நாம் எதிர்பாராத இடங்களில் பாம்புகள் மறைந்திருப்பதுண்டு. திடீரென வீட்டு பொருட்களில் அவை நம் கண்ணில் பட்டால், நம் நிலைமை என்னவாகும்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அல்லவா? அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த வீடியோவிலும் காணப்படுகின்றது.
மேலும் படிக்க | குரங்குகளுக்கு விருந்து வைத்து இணையத்தை அழ வைத்த நபர்: வைரல் வீடியோ
காலணிக்குள் மறைந்திருக்கும் நாகப்பாம்பு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஷூவில் ராஜ நாகம் ஒன்று மறைந்திருப்பதை காண முடிகின்றது. இதைப் பார்த்ததும் வீட்டில் உள்ளவர்கள் திகிலடைகிறார்கள். வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஷூக்கள் மற்றும் செருப்புகளின் அலமாரிகளை வீடியோவில் காண முடிகின்றது. அவற்றில் ஒரு ஷூவில் ஆபத்தான ராஜ நாகம் ஒன்று மறைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டு உறுப்பினர் ஒருவர் இதை பார்த்து விடுகிறார். அதை விரட்ட பாம்பு பிடிக்கும் வல்லுனரை அழைக்கிறார்கள். அந்த பயிற்சியாளர் அந்த பாம்பை லாவகமாக பிடித்துவிடுகிறார்.
வீட்டில் மறைந்திருந்த நாகப்பாம்பு பிடிக்கப்பட்ட வீடியோவை இங்கே காணலாம்:
You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.
WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022
காண்பவர்களை பீதியில் ஆழ்த்திய வீடியோ
இந்த காணொளியில் காணப்படுவது போன்ற காட்சிகளை பொதுவாக காண முடியாது. இதைப் பார்த்தவர்கள் அசந்துபோனார்கள் என்றுதான் கூற வேண்டும். இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர், "மழைக்காலங்களில், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இவை காணப்படலாம். கவனமுடன் இருங்கள். இதற்காக பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாடுங்கள்” என்று எழுதியுள்ளார். 53 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | 'பளார்’ என மெட்ரோவில் இளைஞனை அடித்த பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ