இங்க மாப்பிள்ளை சண்டை போட, அங்க வேற ஒருத்தன் தாலிய கட்ட... சூனாபானா... போச்சா!! வைரல் வீடியோ

Funny Wedding Video: வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் என மாப்பிள்ளை சண்டைபோட்டுக்கொண்டிருக்க, மணமகளுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிடுகிறது. வியப்பூட்டும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 1, 2023, 04:20 PM IST
  • மணமகளின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வெளியாகியுள்ளது.
  • இன்ஸ்டாகிராமில் sakhtlogg என்ற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
  • ஒரு புறம், இந்த வீடியோ ஒரு ப்ராங்க் வீடியோவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இங்க மாப்பிள்ளை சண்டை போட, அங்க வேற ஒருத்தன் தாலிய கட்ட... சூனாபானா... போச்சா!! வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமகனின் ஒரு பரிதாபமான வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும். 

இந்த வீடியோவின் துவக்கத்தில் மணமக்கள் மேடையில் அமர்ந்துள்ளதை காண முடிகின்றது. மணமகள் இருவரும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க மணமகன் யாருடனோ மிக ஆவீசமாக பேசிக்கொண்டு இருக்கிறார். மிக கோவமாக உள்ள அவர், மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுக்கொண்டு இருக்கிறார். 

பேச்சில் வாழ்க்கையை துலைத்த மாப்பிள்ளை

தான் ஒரு பிராபர்டி டீலர் என்றும், தான் மற்றவர்களை ஏமாற்றுவதாகவும், மற்றவர்கள் தன்னை ஏமாற்ற முடியாது என்றும் மாப்பிள்ளை ஜம்பம் அடித்துக்கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் பெண் வீட்டாரிடம், 'பேசிய பணத்தை கொடுத்து விடுங்கள். என்னுடைய பவர் என்ன என்பது உங்களுக்கு தெரியவில்லை. எனக்கு அதிக பண வரவு உள்ளது. நீங்கள் கொடுப்பது ஒரு விஷயமே இல்லை. பத்து லட்சம் என்பது பெரிய பணம் அல்ல. முழுப் பணத்தையும் கொடுங்கள், அப்போதுதான் பெண்ணின் நெற்றியில் குங்குமம் இடுவேன்' என வீராவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | ’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

ஆனால், அப்போது யாருக்கும் தெரியாமல், ஒருவர் மேடையில் ஏறுகிறார். அனைவரது கவனமும் மணமகனின் பேச்சில் இருக்கும் சமயம், அவர் மணமகளின் அருகில் சென்று அவர் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்கிறார். 

கடைசி நேரத்தில் மாறிய மாப்பிள்ளை

ஒரு நபர் வந்து தனக்கு குங்குமம் வைப்பதற்கு மணமகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில விநாடிகளே கொண்ட இந்த வீடியோவில், மணமகளின் எதிர்ப்பு ஏதும் இன்றி, அந்த நபர் அவருக்கு குங்குமம் இடுவதையும், பின்னர் இருவரும் அங்கிருந்து நைசாக கிளம்புவதையும் காண முடிகின்றது. அந்த நபர் குங்குமம் இட்ட உடனேயே மணமகள் நாற்காலியில் இருந்து எழுந்து அந்த நபருடன் செல்வதை வீடியோவில் காண்கிறோம். இது புரியாமல் இன்னும் 'குங்குமம் இட்டு மணம் முடிக்க மாட்டேன்' என வாக்குவாதம் செய்யும் மாப்பிள்ளையை பார்த்தால் பரிதாபமாகவும் உள்ளது, சிரிப்பும் வருகிறது. 

மாறிய மாப்பிள்ளையின் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SAKHT LOGG (@sakhtlogg)

மணமகளின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் sakhtlogg என்ற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு புறம், இந்த வீடியோ ஒரு ப்ராங்க் வீடியோவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எப்படியும் இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | வெறித்தனமான சண்டை..ராட்சத மலைப்பாம்பை பதம் பார்த்த காட்டு ராஜா:திக் திக் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News