கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்!

யானைக்கூட்டங்கள் கரும்பு ஏற்றி சென்ற லாரியை இடைமறித்து சுங்கவரி வசூலிப்பது போன்று அதிலுள்ள கரும்புகளை எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 10:15 AM IST
  • கரும்பு லாரியை வழிமறித்த யானைகள்.
  • சுங்க வரி போல கரும்புகளை ருசி பார்க்கிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! title=

பொதுவாக ஒரு நகரத்தை கடந்து மற்றொரு நகரத்தை சென்றடையும்பொழுது இடையில் சுங்கவரி வசூலிக்கப்படும், இதுவரை சுங்கவரிக்களை மனிதர்கள் வசூலித்து தான் பார்த்திருப்போம்.  ஆனால் இப்போது முதல்முறையாக யானைக்கூட்டங்கள் சுங்கவரி வசூலிக்கும் வீடியோ ஆச்சர்யத்துடன் சிரிப்பையும் சேர்த்து வரவழைத்திருக்கிறது.    இதுபோன்று நம் கற்பனைக்கு எட்டாத வகையில் சில விலங்குகள் செய்யும் வியத்தகு செயல்கள் நம்முடைய கவனத்தை முழுவதுமாக அப்படியே ஈர்த்துவிடுகிறது.  பெரும்பாலும் காடுகளில் வசிக்கக்கூடிய விலங்கினங்களில் யானைகள் தான் அதிகளவில் கவனத்தை ஈர்க்கும்படியான குறும்பு நிறைந்த செயல்களை செய்து பலரின் இதயங்களையும் களவாடிவிடுகிறது.

மேலும் படிக்க | முதலையுடன் மைண்ட்கேம் ஆடிய கோழி: பல்பு வாங்கிய முதலை 

இப்போது யானைக்கூட்டங்கள் செய்யும் இந்த குறும்புத்தனமான வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  அந்த வீடியோவில் ஒரு லாரி நிறைய கரும்பு கட்டுகள் ஏற்றி கொண்டு வரப்பட்டு இருக்கிறது, அந்த கரும்புகள் நிறைந்த லாரியை யானைக்கூட்டங்கள் வழிமறித்து அதிலுள்ள கரும்புகள் சிலவற்றை எடுத்து கொள்கின்றது.  இந்த காட்சியை பார்ப்பதற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களிடம் சுங்கச்சாவடியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சுங்கவரிகளை வசூலிப்பர்களோ அதுபோன்று இருக்கிறது.

 

இந்த வீடியோ இணையவாசிகளிடம் சிரிப்பை வரவழைக்க செய்திருக்கிறது, இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.  கடந்த 20ம் தேதியன்று ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர், மேலும் வீடியோவிற்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | RRR 'நாட்டு கூத்து' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பானிய யூடியூபர்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News