திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்

Snake Viral Video: இப்படி கூடவா நடக்கும் என வியக்க வைக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. பாம்புடன் ஒரு சிறுமி அசால்டாய் படுத்திருக்கும் வீடியோதான் அது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 4, 2022, 11:35 AM IST
  • சிறுமியுடன் விளையாடும் பாம்பு.
  • அஞ்சாமல் சிரிக்கும் சிறுமி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்   title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம், இங்கு நாம் பல விதமான வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. வெளியிடப்பட்ட உடனேயே இவை வைரல் ஆகி விடுகின்றன. நேரில் நெருங்க முடியாத பாம்புகளின் பல்வேறு வகையான வீடியோக்களை மக்கள் இந்த வீடியோக்களின் மூலம் கண்டு களிக்கிறார்கள். 

பெரும்பாலும் பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள். ஆனால், இவற்றை சர்வ சாதாரணமாக கையாளும் பலரையும் நாம் இணையத்தில் கண்டு வியந்துள்ளோம். பாம்புகளை கொஞ்சி, உணவளித்து, தண்ணீர் கொடுத்து, விளையாடி மகிழும் பலரது வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்துள்ளன. ஆனால், இந்த அசாத்திய துணிச்சல் சிறு வயதினருக்கு இருப்பது மிக அரிது.

அப்படிப்பட்ட ஒரு அசாத்திய துணிச்சல் கொண்ட ஒரு சிறுமியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கீழே படுத்துள்ள சிறுமியின் உடலில் ஒரு ஆபத்தான கருப்பு நிற பாம்பு ஊர்ந்து செல்கிறது. ஆனால், அந்த சிறுமிக்கு எந்த பயமும் இல்லை, அவரது முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. பாம்பு தன்னிடம் வந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைவது போலவே அவர் காணப்படுகிறார். 

மேலும் படிக்க | ‘பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்’: கட்டித் தழுவி காதல் செய்யும் பாம்புகள், வைரல் வீடியோ

பாம்புடன் மாஸ் காட்டும் சிறுமி

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சிறுமி சாவகாசமாக படுத்துள்ளதை காண முடிகின்றது. அடுத்த நொடியே 6-7 அடி நீளமுள்ள பாம்பு வருகிறது. பாம்பின் மேல் பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகள் தெரிகின்றன.  சிறிது நேரத்தில் பாம்பு சிறுமியின் மேல் ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது. ஆனால் இங்கு ஆச்சரியமான விஷயம் என்னவெனில், பாம்பை பார்த்து சிறுமி சிறிதும் பதறாமல், பாம்புடன் விளையாடுகிறார். சில இடங்களில் அவர் பாம்புக்கு முத்தமளிக்க முயற்சிப்பது போலவும் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாம்புடன் மாஸ் காட்டும் பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் சிறுமியின் துணிச்சலை பாராட்டினாலும், இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டுகள் தேவைதானா என பலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். இது அந்த சிறுமிக்கு ஆபத்தாக முடியலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ snakemasterexotics என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News