‘என் ஆளுக்கே முத்தமா?’: சீண்டிய நபரை புரட்டி எடுத்த காதலன், வைரல் வீடியோ

Funny Lovers Video: இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகிறது. காதலர்கள் நடனம் ஆடும்போது நடக்கும் ஒரு வினோத நிகழ்வு பற்றியதாகும் இந்த வீடியோ. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 05:45 PM IST
  • இணையத்தில் பல வித வீடியோக்கள் வைரல் ஆகின்றன.
  • தற்போது ஒரு வீடியோ கலக்கி வருகிறது.
  • அந்த வீடியோவை இங்கே காணலாம்.
‘என் ஆளுக்கே முத்தமா?’: சீண்டிய நபரை புரட்டி எடுத்த காதலன், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. நடனம் தொடர்பான ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமாகின்றன. இவை பலரால் அதிகமாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் சில மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணம் உள்ளன. சில சமயம் மிகவும் அரிதான நிகழ்வுகள் கொண்ட வீடியோக்களும் வைரல் ஆகின்றன. அப்படி ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால்  மேடையில் காதலனும் காதலியும் நடனமாடுவது தெரிகிறது. அப்போது மேடைக்கு அருகில் வந்த வாலிபர் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பிக்கிறார். வீடியோவில் இதன் பிறகு நடப்பவற்றை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 

மேலும் படிக்க | நடுரோட்டில் செய்ய வேண்டிய செயலா இது; காதலர்களின் வீடியோ வைரல் 

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில் காதலன் காதலி மேடையில் நடனமாடுவதைக் காண முடிகின்றது. அப்போது ஒரு நபர் மேடைக்கு அருகில் வந்து அந்தப் பெண்ணைக் கேலி செய்யத் தொடங்குகிறார். பெண்ணின் கையில் ரூபாய் நோட்டை கொடுத்து வலுக்கட்டாயமாக அவரது கையை முத்தமிட முயற்சிக்கிறார். இதைப் பார்த்த காதலன் கோபத்தில் சிவந்தான். உடனே காதலியை பின்னுக்கு இழுத்து அந்த நபரை தாக்குகிறார். 

வித்தியாசமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by memes comedy (@ghantaa)

 

மேடையிலேயே தகராறு ஏற்படுகிறது. உடனடியாக டி.ஜே நிறுத்தப்பட்டு சமாதானம் செய்ய முயற்சி நடக்கிறது. ஆனால் காதலனின் கோபம் குறையாமல் மேடையிலேயே மோசமாக கத்த ஆரம்பிக்கிறார். வீடியோவின் இறுதியில் நடக்கும் விஷயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், அந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் ghantaa என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்களும் ஏராளமான லைக்குகளும் இதற்கு கிடைத்துள்ளன. நெட்டிசன்கள் இதற்கு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News