ஸ்கர்ட் அணிந்து மெட்ரோ பயணம் செய்த இளைஞர்கள்: குழம்பிய பயணிகள், வைரலான வீடியோ

Delhi Metro Viral Video: டெல்லி மெட்ரோவில் வினோத ஆடையில் பயணித்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2023, 04:55 PM IST
  • டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர்கள் பாவாடை அணிந்து பயணம்.
  • மெட்ரோவில் மாஸ் காட்டிய இளைஞர்களின் வீடியோவை இங்கே காணலாம்;
  • வீடியோ வைரலாகி, மாஸ் ரியாக்‌ஷன்களை பெற்று வருகிறது.
ஸ்கர்ட் அணிந்து மெட்ரோ பயணம் செய்த இளைஞர்கள்: குழம்பிய பயணிகள், வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதில் சிலர் விசித்திரமான ஆடைகளை அணிந்து சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. சில வினோதமான ஆடைகளை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்படுவதுண்டு. அதுவும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான செயல்களை செய்தும், வித்தியாசமான ஆடைகளை அளிந்தும் பிரபலமாகும் டிரெண்ட் தற்போது அதிகரித்து வடுகின்றது. 

டெல்லி மெட்ரோவில் இரண்டு இளைஞர்கள் "டெனிம் ஸ்கர்ட்" அணிந்திருப்பது போன்ற வீடியோ சமூக ஊடக தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பவ்யா குமார் மற்றும் சமீர் கான் என்ற பயனர்கள் 16 ஏப்ரல் 2023 அன்று இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். நீண்ட டெனிம் ஸ்கர்ட் அணிந்து அவர்கள் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்ததை வீடியோவில் காண முடிந்தது. 

டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர்கள் பாவாடை அணிந்து பயணம்

அவர்களது உடை பலரின் கவனத்தை ஈர்த்தது. வீடியோவின் துவக்கத்தில் இரண்டு இளைஞர்கள் மெட்ரோவில் நடந்து செல்வதை காண முடிகின்றது. அவர்களில் ஒருவர் லாங் டெனிம் ஸ்கர்ட் அணிந்திருக்கிறார். அதுமட்டுமின்றி கருப்பு கண்ணாடி மற்றும் நீல நிற டி-சர்ட்டும் அணிந்திருந்தார். அவருடன் நடந்து செல்லும் மற்றொரு இளைஞனும் இதேபோன்ற ஆடையை அணிந்திருந்தார். 

மேலும் படிக்க | அடுப்பு இல்லாமல் ஆம்லெட் சமைத்த நபர்..! - வைரல் வீடியோ

இருவரும் மிகவும் வினோதமாக காணப்பட்டனர். அதே உடையில் அவர்கள் மெட்ரோ ரயிலுக்குள் நுழைந்ததும் வீடியோ மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. உள்ளே நுழைந்து அவர்கள் பயணிகள் மத்தியில் நின்றவுடன் அனைவரும் அவர்களையே பார்க்கத் தொடங்குகின்றனர்.  மெட்ரோவில் பயணம் செய்த பயணிகளின் ரியாக்‌ஷனை இளைஞர்கள் மற்றொரு நபரின் கேமரா மூலம் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெட்ரோவில் மாஸ் காட்டிய இளைஞர்களின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameer Khan (@sameerthatsit)

அந்த வீடியோ வைரலாகி, மாஸ் ரியாக்‌ஷன்களை பெற்று வருகிறது

டெல்லி மெட்ரோவில் எடுக்கப்பட்ட இந்த வினோதமான வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. இதற்கு 18,000 க்கும் மேற்பட்ட லைக்குகளும் ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இந்த வீடியோ பற்றியும் இளைஞர்கள் அணிந்திருகும் ஆடை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ஆண்களுக்கான இந்த ஆடைகளை இயல்பாக்குவது பற்றி பேசினர், சிலர் சிரிக்கும் எமோஜிகளைப் பகிர்ந்துள்ளனர். பயனர்களிடமிருந்து பல கலவையான எதிர்வினைகள் பெறப்பட்டுள்ளன. ஒரு பயனர் 'இதுதான் டெனிம் லுங்கி' என்று எழுதியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | யம்மாடி..இப்படி ஒரு சண்டையா, முரட்டு காளைகளின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News