மூடில் வந்து டான்ஸ் ஆடிய தாத்தா, ஈடுகொடுத்து குத்தாட்டம் போட்ட பாட்டி: வைரல் வீடியோ

Funny Viral Video: தாத்தா பாட்டியின் கூலான டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 03:15 PM IST
  • தாத்தா பாட்டியின் மாஸ் நடனம்.
  • குத்தாட்டம் போட்ட ஜோடி.
  • வைரலான வீடியோ.
மூடில் வந்து டான்ஸ் ஆடிய தாத்தா, ஈடுகொடுத்து குத்தாட்டம் போட்ட பாட்டி: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: பல விதமான வேடிக்கையான மற்றும் வித்தியாசமான வீடியோக்களின் தளமாக இணையதளம் விளங்குகிறது. இங்கு நாம் பல வித சுவாரசியமான வீடியோக்களை காண்கிறோம். பொதுவாக நாம் காண முடியாத பல விசித்திர காட்சிகளும் நிகழ்வுகளும் இவற்றில் நமக்கு காணக்கிடைக்கின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நம் வாயில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை. இவற்றின் மூலம் நாம் நமது மனதின் இறுக்கங்களை மறந்து சிரிக்கிறோம், சிந்திக்கிறோம். அப்படி ஒரு வீடியோவை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வயதான தம்பதிகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் பார்ப்பதற்கு எப்போதும் மனதை நெகிழ வைக்கும். யாரென்று அறியாத இருவர் ஒன்றாக சேர்ந்து, வாழ்க்கை பயணத்தை நடத்தி, முதுமை வரை துணை இருந்து, முதுமையில் ஒருவருக்கு ஒருவர் ஊன்றுகோலாய் இருந்து வாழ்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவில் ஒரு வயதான தம்பதி நடுரோட்டில் அக்ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ வெளியானது முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | திருமண பூரிப்பில் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்

தாத்தா பாட்டியின் மாஸ் நடனம் 

வைரலாகி வரும் இந்த நடன வீடியோவில், ஒரு முதியவர் சாலையில் நின்று நடனமாடுவதைக் காண முடிகின்றது. அப்போது கேமரா மறுபுறம் திரும்புகிறது. அங்கு, பாட்டி சில பெண்களுடன் நிற்பதை காண முடிகின்றது. தாத்தா ஆடுவதை பார்த்து பாட்டியும் ஆடத் தொடங்குகிறார். இருவரின் இந்த மாஸ் டான்சை பார்க்க கிராமத்தில் கூட்டம் கூடுகிறது. இருவரும் மிக ஸ்டைலாக, எந்த வித தயக்கமும் இன்றி கூலாக டான்ஸ் ஆடுவது காண்பதற்கு மிக நன்றாக உள்ளது. 

தாத்தா பாட்டியின் கலக்கல் நடனத்தை இங்கே காணலாம்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

வீடியோவைப் பார்த்தால் அது ஒரு வட இந்திய கிராமத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. தாத்தா குர்தா, தலையில் தலைப்பாகை ஆகியவற்றை அணிந்துள்ளார். பக்காவான கிராமவாசியாக காணப்படுகிறார். ஆனால் அவருக்கு இருக்கும் உற்சாகம் இந்த காலத்து இளைஞர்களின் உற்சாகத்தையும் மிஞ்சும் அளவில் உள்ளது. 

இந்த வீடியோ butterfly__mahi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு இணையவாசிகள் பலவித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | ‘கன்பியூஸ் ஆய்டேன்’: எஸ்கலேட்டரில் குழம்பி நின்ற பூனையின் வேடிக்கையான வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News