இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த முக்காபுலா டான்ஸ் வீடியோ..!

இளைஞர்கள் ஆடும் முக்காபுலா டான்ஸ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Last Updated : Feb 20, 2020, 06:21 PM IST
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த முக்காபுலா டான்ஸ் வீடியோ..! title=

இளைஞர்கள் ஆடும் முக்காபுலா டான்ஸ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், இளைஞர்கள் ஆடும் முக்காபுலா டான்ஸ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஒரு பிரபலமான முக்காலா.. முக்காபுலா பாடல். இந்த பாடலுக்கு சில இளைஞர்கள் ஆடும் வித்தியாசமான நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த பாடலுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இளைஞர்கள் ஆடும் கண்கவர் நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் சின்னபார் அண்டர்ஸ்கோர் டஸ்ட் என்கிற பெயரில் இருக்கும் கணக்கில் வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிது புதிதாக இளைஞர்கள் தங்களுக்கு இருக்கும் திறமைகளை தாங்களே வெளிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும் சமூக ஊடகங்கள் வந்த பிறகு இவற்றுக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த இளைஞர்களின் இந்த கண்ணை ஏமாற்றும் ஆச்சரிய நடனத்தை திரைத்துறை பிரபலங்கள் உட்பட பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர். இந்த விடியோ தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. பலர் இந்த வீடியோவை தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். 

Trending News