மகேந்திர சிங் டோனி Cycle Stunt செய்யும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி Cycle Stunt செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Last Updated : Aug 1, 2018, 02:10 PM IST
மகேந்திர சிங் டோனி Cycle Stunt செய்யும் வீடியோ! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி Cycle Stunt செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

இங்கிலாந்து அணிக்கு இடையேயான தொடரினை அடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் மகேந்திர சிங் தோனி., தனது ஓய்வு நேரத்தினை சற்று வித்தியாசமாக செலவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது Cycle Stunt செய்து அந்த வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில், அவர் கண்கண்ணாடி அணிந்து, மெதுவாக பள்ளித்தினை தாண்டும் காட்சிகள் அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு அவர் Just for fun, plz try it at home. என தலைப்பினை கொடுத்துள்ளார்.

 

Just for fun, plz try it at home.

A post shared by M S Dhoni (@mahi7781) on

ஜார்க்கண்ட மாநிலம், ராஞ்சி நகரில் பிறந்த மகேந்திர சிங் டோனி 2004-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் துவங்கினார். அணியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தன் தனிப்பட்ட ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணி சரிவை நோக்கிச் செல்லும்போது இறுதியில் களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றதில் டோனிக்கு பெரும் பங்கு உண்டு. 

விளையாட்டிற்கு மட்டும் அல்ல தன் குடும்பத்திற்கு இணையான முக்கியதுவத்தினை அளிப்பவர் டோனி. விளையாட்டின் போது பயிற்சி, போட்டிகள் என பிஸியாக இருக்கும் இவர், ஓய்வின் போது குடும்பம், குழந்தை, வீடு என பிஸியாக மாறிவிடுகின்றார். சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்கும் டோனி, தன் குடும்ப நிகழ்ச்சிகளை குறித்தும் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது தானது ஸ்டன்ட் வீடியாவினை பகிர்ந்துள்ளார்.

Trending News