குட்டி குரங்குக்கு ஸ்கெட்ச் போட்ட முதலை - கடைசி நேரத்தில் டிவிஸ்ட்; வைரல் வீடியோ

குட்டி குரங்கு ஒன்றுக்கு முதலை ஒன்று அமைதியாக ஸ்கெட்ச் போட, தூரத்தில் இருந்த தாய் குரங்கு சாதுர்யமாக செயல்பட்டு குட்டியை காப்பாற்றியது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2023, 08:38 PM IST
  • முதலை போட்ட ஸ்கெட்ச்
  • கடைசியில் டிவிஸ்ட் வச்ச குரங்கு
  • முதலைக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
குட்டி குரங்குக்கு ஸ்கெட்ச் போட்ட முதலை - கடைசி நேரத்தில் டிவிஸ்ட்; வைரல் வீடியோ title=

எது செய்யும்போது பக்கா பிளான் இருக்கணும் என சொல்வதைப்போல், எப்போதும் விழிப்பாக இருப்பது அவசியம். இரண்டையும் சரியாக கையாள தெரிந்தால் மட்டுமே இந்த போட்டி உலகில் அமைதியாக வாழ முடியும். இல்லையென்றால் பிறருக்காக நீங்கள் வாழ வேண்டியிருக்கும். உங்களின் உழைப்பு மற்றும் வாழ்க்கை எல்லாம் வீணாக போய்விட வாய்ப்பிருக்கிறது. சாதுர்யமாக இருந்தால் ஜாலியாக இருக்கலாம். இதற்கு உதாரணமான வீடியோ ஒன்று இப்போது யூடியூப்பில் வைரலாகியுள்ளது. குட்டி குரங்குக்கு முதலை ஸ்கெட்ச் போட, அதனை தூரத்தில் இருந்து பார்த்த தாய் குரங்கு தனது குட்டியை சாதுர்யமாக காப்பாற்றி அழைத்துச் சென்றது.

மேலும் படிக்க | டேய்! நீ ஏண்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க? அதட்டும் யானை அம்மா

இதனை மட்டும் பார்க்காமல் கொஞ்சம் அசால்டாக இருந்தாலும், குட்டி குரங்கு முதலைக்கு இரையாகியிருக்கும். வைரலாக இருக்கும் அந்த வீடியோவில் நீர் நிலைக்கு அருகில் குட்டி குரங்கு ஒன்று விளையாடிக் கொண்டிருக்கிறது. சுற்றி என்ன நடக்கிறது என்பதையெல்லாம் பார்க்காமல் அது ஜாலியாக இருக்கிறது. தாய் குரங்கும் குட்டியை விட்டு சற்று தொலைவில் சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அந்த நேரத்தில் தண்ணீருக்குள் இருந்த முதலை இரை தேடி கரைக்கு வந்தது. 

என்ன இருக்கிறது என சுற்றியும் பார்க்க குட்டி குரங்கு தான் முதலையின் கண்ணில் பட்டது. இதனை விட்டாலும் வேறு வழியில்லை என்ற நிலை இருந்ததால் அதனை வேட்டையாட ஸ்கெட்ச்போட்டது முதலை. மெதுவாக அதனருகே செல்ல முற்பட, தூரத்தில் இருந்த தாய் குரங்கு எப்படியோ இதனை பார்த்துவிட்டது. கொஞ்சமும் தாமதிக்காமல் முதலைக்கு இரையாக இருக்கும் குட்டியை ஓடிச் சென்று தன் முதுகில் வைத்துக் கொண்டு அழைத்து வந்துவிட்டது. இதனை முதலை  சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

எங்கிருந்து டா எனக்கு மட்டும் வர்றீங்க என்ற மைண்ட் வாய்ஸில் வேடிக்கை பார்க்க, குட்டிக் குரங்கு தனக்கு என்ன நடந்து என்ற தெரியாமல் தாயின் முதுகின் மீது கட்டியணைத்து பட்டுத்துக் கொண்டு அடுத்த இடத்துக்கு விளையாட சென்றது. காண்போருக்கு இந்த வீடியோ பிடிக்க வாய்ப்பிருக்கிறது. குரங்கு எங்கிருந்தாலும், தன் குட்டி மீது எப்படி கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பதை வீடியோ பார்க்கும்போது புரிந்து கொள்ளலாம். விலங்காக இருந்தாலும் தாய் பாசம் இருக்க தானே செய்யும். 

மேலும் படிக்க | நீ எவ்ளோ கில்லாடியா இருந்தாலும், என்னை பிடிக்க முடியாது மச்சி

ர்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News