பியானோ கலைஞருக்கு கிடைத்த கியூட் ரசிகர்கள்: மயங்கிய குரங்குகள்.. ரசிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்குகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2023, 10:19 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் artgaleryx என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • நெட்டிசன்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
பியானோ கலைஞருக்கு கிடைத்த கியூட் ரசிகர்கள்: மயங்கிய குரங்குகள்.. ரசிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

கலைகளுக்கு ஒரு தனித்துவன் உண்டு. அவை நம் திறமைகளை அதிகப்படுத்துவதுடன் நமது ஆற்றல் வழிகளையும் விரிவுபடுத்துகின்றன. எந்த விதமான கலையாக இருந்தாலும், அது நமது மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. ஏதாவது ஒரு கலை மீதாவது ஆர்வம் இல்லாத மனிதன் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக, இசை நம் உடலின் இழைகளோடு இணைத்து, தீய சிந்தனைகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிடமிருந்து தப்பித்து வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது. 
பலர் பல விதமான கலைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் தங்கள் திறமையை அதிகரித்துக்கொள்கிறார்கள். ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் மிகவும் முக்கியம். அவர்களை மகிழ்விப்பதே கலைஞனின் முக்கிய நோக்கமாக இருக்கும். வித்தியாசமான ரசிகர் கூட்டத்தால் சூழப்பட்ட ஒரு பியானோ கலைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

பியானோ கலைஞன்... அன்பால் சூழ்ந்த ரசிகர் கூட்டம்

வீடியோவில், ஒருவர் பிடானோ வாசிப்பதை காண முடிகின்றது. அவர் மிக அருமையாக பியானோ வாசிக்கிறார். அவரது பியானோ இசை மிக நன்றாக உள்ளது. மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் அது மயக்குகிறது. பல குரங்குகள் அந்த நபரின் பியானோ இசையை கேட்க வந்து, அங்கேயே நின்று கேட்டுக்கொண்டு இருப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

அந்த நபர் வாசிக்கும் விதமும், அந்த இசையும் அவற்றுக்கு மிகவும் பிடித்து விட்டது போல, குரங்குகள் அனைத்தும் அவர் மீது, ஏறி, அவர் அருகில், எதிரில் என அவரை சுற்றியே இருக்கின்றன. அந்த நபரும் தனது அன்பான வித்தியாசமான ரசிகர்களுக்காக தொடர்ந்து பியானோ வாசித்துக்கொண்டு இருக்கிறார். இந்த காட்சியை காண மிகவும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது. 

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்

கலைஞரின் குரங்கு ரசிகர்களின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் artgaleryx என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. நெட்டிசன்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

இந்த வீடியோவை பார்த்த பலர், " இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை, இசை இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் கொடூரமாக இருந்திருக்கும்" என்று கூறியுள்ளனர். 'விலங்குகளை குழந்தைகளைப் போல நடத்த வேண்டும்.. இந்த வீடியோவை பார்க்க நன்றாக உள்ளது' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 

'இசை என்பது அனைத்து உயிர்களுக்கும் புரியும் மொழி. நீங்கள் உங்கள் தோட்டத்தில் உட்கார்ந்து பாடினால் அல்லது இசைக்கருவியை வாசித்தால், உங்கள் தாவரங்கள் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும். பூக்கள் மிகுதியாக பூக்கும். இது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று மற்றொருவர் கூறியுள்ளார.

'வன விலங்குகளுக்காக இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் நான் பார்த்ததில்லை. இது உண்மையிலேயே அற்புதமான வீடியோ.' என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News