தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பூனையை போராடி மீட்டு குரங்கு: நெகிழவைக்கும் வீடியோ

 Monkey Cat viral video: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடும் பூனைக் குட்டியை பத்திரமாக மீட்க குரங்கு ஒன்று போராடும் வீடியோ இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2023, 11:09 AM IST
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பூனையை போராடி மீட்டு குரங்கு: நெகிழவைக்கும் வீடியோ  title=

இந்த உலகம் அன்பினால் ஆனது சார்.. என படத்தில் வரும் டையலாக்கை கேட்டு பூரித்துபோய் இருக்கும் நமக்கு, குரங்கின் இந்த செய்கை உதாரணமாகியிருக்கிறது. ஆம், அன்பு தான் வாழ்க்கை என உயிருக்கு போராடிய பூனையை மீட்க போராடிய குரங்கு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அன்பு தான் எல்லாமே என்று சொல்பவரை பைத்தியக்காரன் என திட்டும் உலகம், தனக்கொரு ஆபத்து வரும்போதுதான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடி வருபவர்களை பார்த்து மெய்சிலிர்த்து நிற்கும். உணர்ந்தவர்கள் உலகின் மாயையில் இருந்து விடுபட்டவர்கள், உணராதவர்கள் மாயையில் உழன்றுகொண்டிருப்பவர்கள். அத்தகைய அன்பையும், உதவிக் கரம் கொடுப்பதையும் வாழ்கையில் ஒரு அங்கமாகவே வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பொண்ணு ஆடிய ஆட்டத்துக்கு மேடையே பத்திக்கிச்சு: வேற வெவல் வைரல் வீடியோ

அதனை இந்த வீடியோவை பார்த்தால் உணர்ந்துகொள்வீர்கள். அந்த வீடியோவில் பெரிய நில தண்ணீர் தொட்டி ஒன்று இருக்கிறது. தண்ணீர் இல்லையென்றாலும், கால் நனையும் அளவுக்கான நீர் அதில் பாசத்துடன் இருக்கிறது. அதற்குள் எப்படியோ பூனை குட்டி ஒன்று விழுந்துவிடுகிறது. உயிருக்கு போராடும் அந்த பூனைக் குட்டியை தொட்டிக்குள் இருப்பதை குரங்கு பார்த்துவிடுகிறது. உடனே அதனை காப்பாற்ற தொட்டிக்குள் குதித்து, பூனையை தூக்கிக் கொண்டு வரமுடியுமா? என முயற்சி செய்கிறது. ஆனால் அதனுடைய முயற்சி பலனளிக்காததால் வெளியே வந்த மற்றொரு குரங்கை அழைக்கிறது. அதுவும் வரவில்லை. இதனால் இன்னும் சில முயற்சிகளை மேற்கொள்கிறது. எதுவும் பலனளிக்காத நிலையில் பூனையுடனேயே குரங்கு இருக்கிறது.

பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் குரங்கின் பதைபதைப்பை பார்த்துவிட்டு வந்து தொட்டிக்குள் இருக்கும் பூனைக்குட்டியை வெளியே எடுத்துவிடுகிறார். குரங்கும் மகிழ்ச்சியாக தொட்டியில் இருந்து வெளியேறி, இன்முகத்துடன் இருக்கிறது. இந்த வீடியோ @cctvidiots என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து தங்களின் லைக்குகளை குரங்கின் வீடியோவுக்கு கொடுத்திருக்கின்றனர்.  

மேலும் படிக்க | முதலையை அட்டாக் செய்த சிறுத்தை - திடீரென வந்த காட்டெருமை கூட்டம்: அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News