கட்டிங் அண்ட் ட்ரிம்மிங் செய்ய அமர்த்தலாய் சலூனுக்கு வந்த குரங்கின் வைரல் வீடியோ

வைரலாகி வரும் இந்த 45 வினாடிகள் கொண்ட வீடியோவில், குரங்கு நாற்காலியில் டிரிம்மிங்கிற்காக அமர்ந்திருப்பதையும், முடிதிருத்தும் நபர் அந்த குரங்கின் தலைமுடியை சீப்பினால் அலங்கரிப்பதையும் காண முடிகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 04:09 PM IST
கட்டிங் அண்ட் ட்ரிம்மிங் செய்ய அமர்த்தலாய் சலூனுக்கு வந்த குரங்கின் வைரல் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.

இதில் ஒரு குரங்கை அதன் உரிமையாளர் சலூனுக்கு டிரிம் செய்ய அழைத்துச் செல்கிறார். இங்கு குரங்கு நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, அதன் பிறகு முடி திருத்தும் நபர் தன் பணியை தொடங்குகிறார்.

ஆனால் அதற்குப் பிறகு நாம் வீடியோவில் காணும் காட்சிகளைப் பார்த்து நம்மால் கண்டிப்பாக் சிரிப்பை அடக்க முடியாது. ஒரு நபர், ஒரு குரங்கின் முடியை ட்ரிம் செய்வதற்காக சலூனுக்கு அழைத்துச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த வீடியோ மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கியூட்டான இந்த வீடியோவை ஐபிஎஸ் ரூபின் சர்மாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்ததுடன், அவர், ‘பியூட்டி பார்லரா.. இப்போது ஸ்மார்டாக உள்ளாய்’ என்றும் எழுதியுள்ளார்.

ALSO READ:Viral Video: இணையவாசிகளை உறைய வைக்கும் ராட்சஸ மலைப் பாம்பு..!! 

வைரலாகி வரும் இந்த 45 வினாடிகள் கொண்ட வீடியோவில், குரங்கு நாற்காலியில் டிரிம்மிங்கிற்காக அமர்ந்திருப்பதையும், முடிதிருத்தும் நபர் அந்த குரங்கின் தலைமுடியை சீப்பினால் அலங்கரிப்பதையும் காண முடிகின்றது. குரங்கிற்கு டிரிம்மிங் செய்ய முடி திருத்தும் நபர் முடி வெட்டும் இயந்திரத்தை எடுக்கிறார். இதைப் பார்த்தவுடன் குரங்கு கொஞ்சம் பதற்றமடைகிறது.

பார்பர் மெதுவாக குரங்கின் (Monkey) முடியை ட்ரிம் செய்வதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், இந்த முழு நடவடிக்கையின் போது, குரங்கின் ரியாக்‌ஷனைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை நூற்றுக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், நெட்டிசன்களும் (Netizens) இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

இதைப் பார்த்த பயனர் ஒருவர் கமெண்ட் செய்கையில், ‘மிக நன்றாக ஷேவ் செய்ய வேண்டும். இன்று என் திருமணம்’ என்று வேடிக்கையாக எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர் ஐபிஎஸ் சர்மாவிடம், “இந்த வீடியோவெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்குது சார்?” என ஆச்சரியமாக கேட்டுள்ளார்.

ALSO READ:Bizarre Wedding: மற்றுமொரு செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News