பீர் அடிச்ச குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன், ஷாக் ஆன நெட்டிசன்கள்: வைரல் வீடியோ

Funny Viral Video: பீர் அடித்து போதையான குரங்கு!! குறும்புக்கார குரங்குகளை பார்த்திருப்பீர்கள். குசும்புக்கார குரங்குகளை பார்த்ததுண்டா? அப்படிப்பட்ட ஒரு குசும்பு பிடித்த குரங்கின் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2022, 11:27 AM IST
  • குரங்கின் ஒரு கலக்கல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இதில் ஒரு குரங்கு பீர் அடித்து போதையில் இருப்பதை காண முடிகின்றது.
  • இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பீர் அடிச்ச குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன், ஷாக் ஆன நெட்டிசன்கள்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் குரங்குகளின் பல வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் குரங்கின் ஒரு கலக்கல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு குரங்கு பீர் அடித்து போதையில் இருப்பதை காண முடிகின்றது. இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

குரங்குகள் பொதுவாக கூட்டமாக காணப்படுகின்றன. இவை உணவை தேடி சில சமயம் வயல்களில் பயிர்களை நாசமாக்கும். அல்லது கோவில்கள் அல்லது தெருக்களில் சுற்றித்திரியும். ஆனால், இவற்றுக்கு கோவம் வந்துவிட்டால், எதிரில் உள்ளவர்களை தாக்க இவை சிறிதும் தயங்குவதில்லை. குறும்புக்கார குரங்குகள் இருக்கும் அதே நேரத்தில் பல குசும்புக்கார குரங்குகளையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். அப்படிப்பட்ட ஒரு குசும்பு பிடித்த குரங்கின் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

மேலும் படிக்க | இனி கிட்ட வந்த இதான் நடக்கும்.. கொரில்லாவின் சேட்டை வீடியோ!

சரக்கடித்து போதையில் முழிக்கும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

வைரலாகி வரும் வீடியோவில், குரங்கு ஒன்று தனது போதையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பீர் பாட்டிலை வாயில் வைத்து பீர் குடிப்பதை காண முடிகின்றது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதை பார்த்து விக்கித்து போன நிலையில், சிலர் இன்னும் குடிக்கச்சொல்லி குரங்கை தூண்டிவிடுவதையும் காண முடிகின்றது. குரங்கு பீர் குடிப்பதை பார்த்து, அங்கு அருகில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், இணையவாசிகளும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

குரங்குக்கு அது பீர் பாட்டில் என்றும், அதை குடித்தால் போதை கிடைக்கும் என்பதும் தெரிந்திருந்தது. அதற்காகவே அதை வலுகட்டாயமாக அங்கிருந்தவர்களிடம் அது பிடுங்கிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோவாக கூறப்படுகின்றது. அந்த வீடியோவில், குரங்கு பீர் பாட்டிலை வாயில் வைத்து அதை சாய்த்து ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் பாட்டிலில் உள்ள பீர் முழுவதையும் குடிக்க முயற்சி செய்வதை காண முடிகின்றது. 

இந்த வீடியோ பல சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனை பயனர்கள் வைரல் ஆக்கியுள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் இதற்கு கடுமையான விமர்சனங்களையும் அளித்து வருகின்றனர். 

‘போதைப்பழக்கம், குடிப்பழக்கம்...இவை எல்லாம் குரங்குகளையும் விட்டு வைக்கவில்லையா’ என ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ‘மனிதர்கள் இதையும் குரங்குகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்கள்’ என ஒரு பயனர் தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News