‘ஏய்..எனக்கு சிப்ஸ் கொடுக்க மாட்டியா?’: கோவத்தில் குரங்கு செய்த வேலை, வைரல் வீடியோ

Funny Viral Video: குறும்புக்கார குரங்குகளின் கும்பலில் மாட்டிக்கொண்டு தவித்த நபரின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 04:36 PM IST
  • குடிமகனை தாக்கிய குரங்குகள்.
  • மாட்டிக்கொண்டு முழித்த நபர்.
  • குரங்குகளின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்.
‘ஏய்..எனக்கு சிப்ஸ் கொடுக்க மாட்டியா?’: கோவத்தில் குரங்கு செய்த வேலை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் மற்றும் லங்கூர்கள் மிகவும் குறும்பு செய்யும் விலங்குகளாக கருதப்படுகின்றன. குறும்பு செய்ய கிடைக்கும் எந்த வாய்ப்புகளையும் அவை தவற விடுவதில்லை. சாலையில் செல்பவர்களிடமிருந்து பொருட்களை பறித்துக்கொண்டு ஓடுவது இவற்றின் வழக்கம். மனிதர்கள் பொருட்களை தராவிட்டால் மோசமாக காயப்படுத்துவதும் இவற்றின் வழக்கமாகும். சமீபத்தில் குரங்கின் குறும்புத்தனம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஒரு நபர் மூன்று நான்கு குரங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு முழிப்பதை காண முடிகின்றது. இதில் முதலில் அந்த நபருடன் சண்டையிடும் குரங்குகள் பின்னர் அவருடன் நட்புடன் பழக ஆரம்பிக்கின்றன. 

குடிமகனை தாக்கிய குரங்குகள்: 

வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், ஒரு நபர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை திறந்து சாப்பிட்டத் துவங்குவதைக் காண முடிகின்றது. சிறிது நேரத்தில் ஒரு குரங்கு கூட்டம் அங்கு வருகிறது.  அனைத்து குரங்குகளும் அவரிடம் சிப்ஸ் கேட்கின்றன. அவர் கொடுக்க மறுக்கவே, அவை அவரிடமிருந்து பாக்கெட்டை பறிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதில் ஒரு குரங்கு கோபமடைந்து அவரது தலைமுடியை பிடித்து தரையிலும் தள்ளி விடுகிறது. 

மேலும் படிக்க | குரங்கின் சூப்பர் போல் டான்ஸ்: ‘வாவ்’ என வியக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

குரங்குகளின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

parida20208)

சிப்ஸ் பாக்கெட் கொடுக்காததால், குரங்குகள் அந்த நபரை பாடாய் படுத்துகின்றன. அந்த நபரை பார்த்தால் அவர் மது போதையில் இருப்பது போல தோன்றுகிறது. பின்னர், அவர் குரங்குகளுக்கும் சிப்ஸை கொடுத்து தானும் சாப்பிடுகிறார். இதை பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித ரியாக்‌ஷன்களை அளித்து வருகிறார்கள். 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் parida20208 என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | முதலை வடிவில் ராட்சத உடும்பு, அலறியடித்து ஓடிய மான்: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News