பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன் போன்று இருக்கும், பார்சிலோனா கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ்-க்கு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டதாக மைக்கேல் ஜாக்சன் 2009 -ல் இறந்தார். இதன் காரணமாக அவரது மருத்துவர் கான்ராட் முர்ரே 2011-ஆம் ஆண்உட தன்னிச்சையான மனிதக் கொலைக்கு தண்டனை பெற்றார், பின்னர் நல்ல நடத்தைக்காக விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான, பார்சிலோனாவில் பிறந்த செர்ஜியோ கோர்டெஸ் மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டுள்ளார்.
Thailand 23 Dem. a href="https://t.co/uTNSzmfCjH">pic.twitter.com/uTNSzmfCjH
— Sergio Cortés (@SergioCort) October 30, 2019
உலகெங்கிலும் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ள, சமீபத்தில் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் அவரது நிகழ்ச்சிக்கு ரசிகர்களை அழைப்பதற்கான அழைப்பு வீடியோ அது.
இதனிடையே செர்ஜியோ கோர்டெஸ் ரசிகர்கள் சிலர், இவர் தான் உன்மையான மைக்கேல் ஜாக்சன் எனவும், தனது இருப்பை மறைக்க தான் இறந்துவிட்டதாய் நாடகம் ஆடுகிறார். எனவே செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என நிரூபிக்க DNA பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அதிகமாக உட்கொண்ட மைக்கேல் ஜாக்சன் 2009-ஆம் ஆண்டு தனது 50-வது வயதில் இறந்தார். ஜாக்சன் தனது அறையில் சுவாசிக்கவில்லை என்பதைக் கண்டறிந்த அவரது மருத்துவர் கான்ராட் முர்ரே, 2011-ல் தன்னிச்சையான மனிதக் கொலைக்கு குற்றவாளி எனக் கருதப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் நல்ல நடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.