சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Viral Video: சும்மா இருந்த சேவலை சீண்டிய நபரை அந்த சேவல் வெச்சி செஞ்ச வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 4, 2022, 01:27 PM IST
  • சும்மா இருந்த சேவலை சீண்டிய நபர்.
  • பழி வாங்கிய சேவல்.
  • வைரலான வீடியோ.
சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

கோழிகள் மனிதர்களுடன் நட்பாக இருக்கும் அளவுக்கு சேவல்கள் நட்புடன் இருப்பதில்லை. இவை சில சமயங்களில் மிக ஆக்ரோஷமான நடந்துகொள்வதையும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் காண்கிறோம். எனினும், விலங்குகள் மற்றும் பறவைகள் என அனைத்தும், மனிதர்கள் சீண்டினால்தான் அதிக ஆக்ரோஷமடைகின்றன. மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகள், பறவைகளாக இருந்தாலும் சரி, எல்லை மீறி சீண்டினாலோ, தேவையில்லாமல் ஒருவரது நடவடிக்கைகளில் கேடு விளைவித்தாலோ, அனைவருக்கும் கோவம் வரும். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், எந்த வம்புக்கும் போகாமல் ஓர் இடத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் சேவல் ஒன்றை ஒரு நபர் சீண்டி வம்பிழுப்பதை காண முடிகின்றது. ஒரு குச்சியுடன் அந்த சேவலின் அருகில் வரும் நபர் அதை தாக்க முயல்கிறார். ஆனால், அந்த நபர் சேவலின் அருகில் சென்ற உடனேயே சேவலுக்கு அவரது எண்ணம் புரிந்து விடுகிறது. 

சினம் கொண்ட சேவல் அந்த நபருக்கு பதிலடி கொடுக்கிறது. சேவல் கோவத்துடன் அந்த நபரை பின்தொடர்ந்து தாக்கத் தொடங்குகிறது. இதை அந்த நபர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது ஆச்சரியத்திலிர்ந்து தெரிகிறது. 

மேலும் படிக்க | மீண்டும் மீண்டும் சீண்டிய பெண்: கடுப்பாகி குரங்கு செய்த செயல், வைரல் வீடியோ

சேவல் கொடுத்த ஷாக்கை எதிர்பாராத நபர், அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறார். சேவல் அவரை தொடர்ந்து தாக்க, அவர் ஒரு மரத்தின் கிளைகளில் சிக்கிக்கொள்கிறார். அந்த பகுதி ஒரு மேடான பகுதி என்பதால், அச்சத்தில் ஓடிய நபர் மேலிருந்து அலறியபடியே கீழே விழுகிறார். கோவமாக தன்னைத் துரத்தும் சேவலிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள முடிந்தவரை வேகமாக ஓட அவர் முயற்சிக்கிறார். 

இதை வீடியோவாக படமெடுக்கும் நபரும் இதைப் பார்த்து, அடக்க முடியாமல் சிரிப்பதை வீடியோவில் கேட்க முடிகின்றது. 

வம்புக்கிழுத்த வாலிபரை வெச்சி செஞ்ச கோழியின் வைரல் விடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவை ‘kumarayush21’ என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் அவர், ‘சேவலுடன் மோதலா? வேண்டாம்!1’ என தலைப்பிட்டுள்ளார். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

‘அந்த மனிதர் செய்த செயலுக்கு உடனடி கர்மா இதுதான்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘அப்பாவி பறவைகள் மற்றும் விலங்குகளை தேவை இல்லாமல் சீண்டும் மனிதர்களின் குணம் எப்போது மாறுமோ தெரியவில்லை’ என ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். 

சேவல் தன்னை பார்த்து அச்சப்பட்டு ஓடும் என குச்சி கொண்டு அந்த நபர் அதை தாக்க வந்தார். ஆனால் அஞ்சி ஓடியது யார்? யாரையும் குறைவாக எடை போடக்கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 

மேலும் படிக்க | குரங்கை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு: கிடுகிடிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News