இன்று பிறந்த நாள் காணும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டிக்கு வயது 70! இன்றும் அவரைப் பார்த்தால் அவரது வயது எவ்வளவு என்பதை கணிப்பது கடினமானது தான்.
கோலிவுட்டில் கமல், ரஜினி என்ற இரு ஆளுமைகளைப் போல, மாலிவுட்டில் மம்முட்டியும், மோகன்லாலும் எப்போதும் கதாநாயகர்கள் தான்.
இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் மம்முட்டிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை மழையாக பொழிந்து வருகின்றனர். தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும் மம்மட்டி தனது டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
— Mammootty (@mammukka) September 7, 2021
அவரது பதிவில், “முதலமைச்சர் முதல் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் அமிதாப் பச்சன், மோகன்லால், கமலஹாசன் உட்பட பல நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையுலகத்தினர், ஊடக நண்பர்கள், பதிப்பகங்கள், தொலைகாட்சி சேனல்கள், டிஜிட்டல் ஊடகங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் மூலம் தங்கள் அன்பை தெரிவித்து வருகின்றனர்.
“பொதுவாக பிறந்தநாளை நான் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. ஆனால், எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என லட்சக்கணக்கானவர்கள், என்னை தங்களது குடும்பத்தில் ஒருவராய் நினைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதை பெரும் பேறாக நினைக்கிறேன். எனது தாழ்மையான நன்றிகளையும், அன்பையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த வரை, தொடர்ந்து உங்கள் அனைவரையும் சினிமாவில் மகிழ்விக்க விரும்புகிறேன்” என மம்மட்டி நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.
ALSO READ | உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் 50 ஆண்டு திரைப்பயணம்
முகமது குட்டி என்ற மம்மட்டியின் செல்லப்பெயர் மம்முக்கா. பல்வேறு இந்திய மொழிகளில் 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள மம்முக்கா, மூன்று முறை தேசிய திரைப்பட விருதையும், ஏழு முறை கேரள அரசின் விருதையும், ஏசியா நெட் விருதினை 5 முறையும், 13 முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று கேரளா மாநிலத்தில் கோட்டயத்தின் செம்பு என்ற இடத்தில் இஸ்மாயில் – பாத்திமா தம்பதிகளின் மகனாக பிறந்தார் முகமது குட்டி.
1971ம் ஆண்டு, அனுபவங்கள் பாலிச்சகள் மற்றும் காலச்சக்கரம் என்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தாலும், 1980 ஆம் ஆண்டு எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள் (Vilkanandu Swapnangal) என்ற திரைப்படம் தான், ரசிகர்களின் நாயகனாக மம்மட்டியை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவைத்தது.
1998 ஆம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான "பத்மஸ்ரீ விருதினை வழங்கி நடிகர் மம்மட்டியை சிறப்பு செய்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மம்முக்கா.
READ ALSO | வீட்டிலிருந்தே மம்முட்டியை இயக்கிய துல்கர் சல்மான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR