'ரத்தத்தின் ரத்தமே' தம்பிகளை காப்பாற்றும் குட்டி சிறுமியின் கியூட் வீடியோ வைரல்

சாலையில் வந்த பொக்லைன் வாகனத்தை முன்னெச்சரிக்கையாக நிறுத்தி தம்பிகளை பத்திரமாக அழைத்துச் செல்லும் சிறுமியின் கியூட் வீடியோ வைரலாகியுள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 4, 2023, 07:59 PM IST
  • தம்பிகளை காப்பாற்றும் சிறுமி
  • இணையத்தை கவர்ந்த வீடியோ
  • அன்புக்கு எடுத்துக்காட்டு என கமெண்ட்
'ரத்தத்தின் ரத்தமே' தம்பிகளை காப்பாற்றும் குட்டி சிறுமியின் கியூட் வீடியோ வைரல் title=

அக்கா உடையவர்கள் இன்னொரு அம்மா உடையவர்கள் என்று சொல்வதுண்டு. தாய்ப் பாசத்திற்கு இணையானது தமக்கையின் பாசம். அப்படி தன் உடன்பிறப்புகளை காக்கும் முனைப்புடன் சின்னஞ்சிறிய அக்கா ஒருத்தியின் பாசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப்பில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ, அக்கா ஒருவர் தனது உடன்பிறந்தவர்களிடம் கொண்டுள்ள கலப்படமற்ற அன்பை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது.

அந்த வீடியோவில், ஒரு கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் இடம் ஒன்றின் அருகிலுள்ள சாலையில் மூன்று சிறுவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாக முன்பக்கமாக பாரம் ஏற்றியபடி ஒரு வாகனம் வருகிறது. உடனடியாக அந்த மூன்று சிறுவர்களில் மூத்தவள் தனது இரண்டு பிஞ்சுக் கரங்களையும் நீட்டியபடி வண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்கிறார். கூடவே, தனது உடன்பிறப்புகள் முன்னே சென்றுவிடாதபடி அவர்களுக்கு முன் ஒரு கவசமாக நிற்கிறாள்.

மேலும் படிக்க | ஆட்டோவில் கூலர்: இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க... வைரல் வீடியோ

சிறுமியின் சமிக்ஞைக்கு வண்டி நிற்கவும், அருகில் இருக்கும் கட்டிடத்திற்குள் தனது உடன்பிறப்புகளை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்துவிட்டு, வண்டிக்கு வழிவிட்டு தானும் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து கொள்கிறாள். தனது தமக்கை வேலையை தீவிரமாக செய்யும் சிறுமியின் செயல் நமக்குள் ஆனந்த புன்னகையை வரவழைக்கத்த தவறுதில்லை.

"ஒரு சிறுமி தனது அக்கா வேலையை தீவிரமாக செய்கிறார்" என்ற வாசகத்துடன் இந்த வீடியோ டிவிட்டரிலும் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். 30 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், " வாவ்... ஒரு சின்னஞ்சிறுமிக்கு தனது உடன்பிறந்தவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. அந்த வண்டி ஓட்டுநரும் அற்புதமானவர் எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “இவர் மிகச் சிறந்த அக்கா. தனது சகோதர்களை மிகவும் கரிசனத்துடன் பாதுகாக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

“நல்ல சிறுமி. நான் அவளை அரவணைத்து எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று மூன்றாவது பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். “உங்களுடைய வாசகம் மட்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை பார்க்கும் பலர் இது ஒரு சீன விபத்து வீடியோ என்றே நினைத்திருப்பார்கள்” என்று நான்காவது நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News