காட்டு எருமைகளின் பிடியில் சிக்கிய சிங்கம்: வீடியோ வைரல்

இதில் சிங்கம் எப்படி வேட்டையாட சென்று காட்டு எருமைகளிடம் அடி வாங்கியது என்பதை வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 13, 2022, 02:34 PM IST
  • எருமைகளிடம் சிக்கிக் கொண்ட சிங்கம்
  • பழிக்கு பழி தீர்த்த எருமைகள்.
  • வைரலாகும் திக் திக் வீடியோ.
காட்டு எருமைகளின் பிடியில் சிக்கிய சிங்கம்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டில் சிங்கங்களும் புலிகளும் மற்ற விலங்குகளை வேட்டையாடும் பல வீடியோக்களை நாம் பொதுவாக பல வீடியோக்களில் பார்த்திருப்போம். ஆனால் சிங்கத்தையே வேட்டையாடும் சில மிருகங்களும் உள்ளன. இதை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, காண்பவர்களுக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கின்றது. எருமைகளின் ஒரு கூட்டம் தனியாக சிக்கிக்கொண்ட ஒரு சிங்கத்தை பாடாய் படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது.

சிங்கம் மற்றும் எருமை சண்டை
காட்டில் எருமைக்கூட்டம் எப்படி ஓய்வெடுக்கிறது என்பதைக் காணலாம். அதனால்தான் சிங்கம் அதை சுலபமான இரையாகக் கருதி அங்கு செல்கிறது. முதலில் சிங்கம் தாக்கியவுடன் அனைத்து எருமைகளும் சேர்ந்து அந்த சிங்கத்திற்கு பதிலடி கொடுத்தன. பின்னர் தங்கள் கொம்புகளால் சிங்கத்தை தூக்கி வீசுகிறது. இப்படி ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை நடக்கின்றது. 

சிங்கம் மற்றும் எருமை சண்டை வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சிங்கங்கள் மற்றும் எருமைகள் தொடர்பான இந்த வீடியோ deon_wildlifephotography என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News