Smartest Snake: உலகத்திலேயே புத்திசாலி பாம்பு இதுதான்! இல்லைன்னு நிரூபிக்கத் தயாரா? வீடியோ வைரல்

Shocking Video From Youngster: சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில் ஒரு இளைஞர் அச்சமின்றி பாம்பை பிடித்துக் கொண்டு அதைப் பற்றி லெக்சர் கொடுக்கிறார்! என்ன சொல்கிறார் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2024, 07:49 PM IST
  • கையில் பாம்புடன் லெக்சர் கொடுக்கும் துணிச்சல்கார இளைஞர்
  • மஞ்சள் பாம்பு வைரல் வீடியோ
  • உலகத்திலேயே புத்திசாலி பாம்பை பார்த்துண்டா?
Smartest Snake: உலகத்திலேயே புத்திசாலி பாம்பு இதுதான்! இல்லைன்னு நிரூபிக்கத் தயாரா? வீடியோ வைரல் title=

பிரம்மாண்டமான நாகப்பாம்பை அசால்டாக கையாளும் ஒருவரைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. அதனால் தான் உலகத்திலேயே புத்திசாலி உயிரினம் பாம்பு தான் என்று சொல்லும் இளைஞரின் வீடியோ வைரலாகிறது. சமூக ஊடகம் பலதரப்பட்ட ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.

கற்பனைக்கும் எட்டாத விஷயங்களையும் நமது கைப்பேசிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன என்றால், சில அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. வழக்கமாக விலங்குகளின் வீடியோக்களை பார்த்து ரசிக்க இணையத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆனால் தற்போது, வைரலாகும் ஒரு வீடியோவில் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பது வீடியோவில் இருக்கும் பாம்பு இல்லை, அதை கையாளும் இளைஞர் தான் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்ததாக இருக்கிறது.  

மேலும் படிக்க | பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கலாம்? அசர வைக்கும் வீடியோ வைரல்

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில் ஒரு இளைஞர் அச்சமின்றி பாம்பை பிடித்துக் கொண்டு அதைப் பற்றி லெக்சர் கொடுப்பதைப் பார்த்து பயந்துபோனாலும், பல முறை வீடியோவை பார்த்துவிட்டும் திட்டுபவர்களின் எண்ணிக்கைத் தான் அதிகமாக இருக்கிறது.

வெறும் கைகளால் பயமின்றி பாம்பை கையாளும் காட்சிகளைப் பார்த்தால், பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இவருக்கானது அல்ல என்று தோன்றுகிறது. இதனால் தான், லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்த வீடியோவாக மாறி இந்த வார வைரல் வீடியோக்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 

மேலும் படிக்க - Viral Video: பளார்.. பளார்.. நீதிமன்ற அறையில் கணவனை தாக்கிய மனைவி

பல்வேறு சமூக ஊடக தளங்களிலும் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்தால் பலருக்கும் பீதி ஏற்படுகிறது. தன்னை விலங்கு மற்றும் பாம்புகளின் ரசிகராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் Nick the Wrangler என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட காட்சிகள், 4 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பார்க்க வைத்துள்ளது.

பலர் இந்த பாம்பு வீடியோவைப் பார்த்து பயந்தாலும், சிலர் இளைஞர் நிக் தைரியமானவர் என்று பாராட்டுகின்றனர். இந்த அசாதாரணமான காட்சியை ரசிப்பவர்கள் கூட, "இது பயங்கரமானது" என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

"இதுபோன்ற அசட்டு துணிச்சல் காரியங்களை மீண்டும் செய்ய வேண்டாம்" என்று தான் பலரும் கூறுகின்றனர். இந்த வீடியோ இன்னும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பெருசா...? எப்புட்றா.. என்ன வேகம்.. - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News