மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்!
காவல்துறை சீருடையில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கால்களை தொடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஐ.பி.எஸ் அதிகாரி மம்தா பானர்ஜியின் கால்களைத் தொட்டு வணங்குகிறார். மம்தா பானர்ஜியும் அந்த அதிகாரி தனது கால்களைத் தொடுவதற்கு முன்பு அதிகாரியிடம் கேக் கொடுப்பதைக் காணலாம்.
சீருடை அணிந்திருந்த அந்த அதிகாரி, ராஜீவ் மிஸ்ரா அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பாசிமஞ்சல் IG பதவி வகித்து வருகிறார். கிடைத்த தகவல்களின்படி, மம்தா பானர்ஜி கடந்த வாரம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் திகா பகுதிக்கு நிர்வாகக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். ஆதாரங்களின்படி, இந்த நிகழ்வு உத்தியோகபூர்வமானது அல்ல, இது 4-5 அதிகாரிகளிடையே பிறந்தநாள் கொண்டாட்டமாகும். அதே நிகழ்வில் கேக் வெட்டிய பிறகு, ஐ.பி.எஸ் அதிகாரி மம்தா பானர்ஜியின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான போது மேற்கு வங்காளத்தின் பாஜக பிரிவு திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டது. மேற்கு வங்க பாஜக பொறுப்பாளரும் கட்சியின் மூத்த தலைவருமான கைலாஷ் விஜயவர்ஜியா தனது எதிர்பினை பதிவு செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "தீதிக்கு முன்னால் தலைகுனியும் தலைமை" என்று பதிவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில், மேற்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா சீருடையில் இருப்பதும், மேற்கு வங்க முதல்வரின் கால்களை தொடுவதும்" இது என்ன மாதிரியான அமைப்பு, இது என்ன வகையான ஜனநாயகம்?" என குறிப்பிட்டுள்ளார்.
दीदी के सामने वर्दी नतमस्तक !!!
पश्चिम बंगाल के पश्चिमी झोन के पुलिस IG राजीब मिश्रा ने वर्दी में ममता बैनर्जी का चरणवंदन किया! ये कैसी व्यवस्था और कैसा लोकतंत्र है? pic.twitter.com/S0aKbkGsjZ
— Kailash Vijayvargiya (@KailashOnline) August 28, 2019