பயிற்சி ஆட்டத்தின் போது தோனி சிக்ஸர் விளாசும் வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது..!
IPL T20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முதல் போட்டியில் CSK மற்றும் மும்பை அணிகள் மோதுவுள்ளதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனிடையே, IPL அணிகளும் தங்கள் பங்கிற்கு பயிற்சி ஆட்டத்தில் கலக்கலான வீடியோக்களை தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை எதிர்பார்பில் ஆழ்த்தி வருகின்றனர். ரிஷப் பண்ட், ரோகித் சர்மா என வீரர்கள் அதிரடியாக சிக்ஸர் விளாசும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ALSO READ | IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!!
அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளது. தோனி சென்னை வீரர் பத்ரிநாத்திற்கு ஏதோ வழிகாட்டுவது போல் அது உள்ளது. இதையடுத்து, CSK வெளியிட்ட வீடியோவில், தோனி தனக்கு வீசப்பட்ட பந்தினை சிக்ஸராக விளாசுகிறார். தோனி சிக்ஸர் விளாசிய வீடியோ ஏற்கனவே நிறைய வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், இந்த வீடியோ சற்றே வித்தியாசமானது. ஏனெனில், தோனி அடிக்கும் பந்து மைதானத்திற்கு வெளியே ஏதோ ஒரு மரங்களுக்கு நடுவில் சென்று விழுகிறது. பந்து எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விழும்போதே பந்து தொலைந்துவிட்டது என ஒரு வீரர் பின் குரலில் சொல்லுகிறார். அதேபோல், முரளி விஜயும் இந்த ஷாட் குறித்து வியந்து பேசுகிறார்.
All you've got to do is watch this little video till the end and keep looping it. #WhistlePodu #YelloveGame @msdhoni @mvj888 @russcsk pic.twitter.com/Yz5f1DQbOV
— Chennai Super Kings (@ChennaiIPL) September 10, 2020
தோனி சிக்ஸருக்கு விளாசிய பந்து எல்லைக் கோட்டிற்கு வெளியே தொலைந்து போனது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேகத்தில் கேப்டன் தோனி களத்திலும் காட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி கொண்டிருக்கிறார்கள். நேற்று ரோகித் சர்மா சிக்ஸர் விளாசிய வீடியோ ஒன்று வெளியானது. அந்த பந்து எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று கொண்டிருந்த பேருந்தின் கூரை மீது விழுந்தது குறிப்பிடத்தக்கது.