Watch: இராணுவ வீரர்கள் சுத்தியால் அடித்தும் உடையாத உணவு பொருட்கள்!

சியாச்சின் முகாமில் ஐஸ்கட்டியாக உறைந்திருக்கும் உணவு பொருட்கள் சுத்தியலால் அடித்தும் உடையாமல் இருக்கும் வீடியோவை பகிர்ந்த ராணுவ வீரர்கள்!!

Last Updated : Jun 9, 2019, 02:02 PM IST
Watch: இராணுவ வீரர்கள் சுத்தியால் அடித்தும் உடையாத உணவு பொருட்கள்! title=

சியாச்சின் முகாமில் ஐஸ்கட்டியாக உறைந்திருக்கும் உணவு பொருட்கள் சுத்தியலால் அடித்தும் உடையாமல் இருக்கும் வீடியோவை பகிர்ந்த ராணுவ வீரர்கள்!!

சியாச்சின் பனிமலையில் அமைந்துள்ள ராணுவ முகாமில் உள்ள ராணுவ வீரர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அந்த பகுதியில் எடுக்கப்பட்டிருக்கு வீடியோவில், பாக்கெட்டில் இருக்கும் பழச்சாறு செங்கல் போல ஐஸ் கட்டியாக இருப்பதையும், அதனை சுத்தியலால் அடித்தும் உடையாததையும் ராணுவ வீரர்கள் காட்டுகின்றனர்.

இதே போல முட்டைகள், காய்கறிகள் எல்லாம் ஐஸ் கட்டியாக இருப்பதையும் வீடியோவில் காட்டும் ராணுவ வீரர்கள், சியாச்சினில் வாழ்வது எவ்வளவு கடினமான ஒன்று என்பதையும் விளக்குகின்றனர். தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் சியாச்சினில் சந்தித்து வரும் சவாலான சூழ்நிலையை விளக்கும் வகையில் 3 இராணுவ வீரர்கள் வீடியோ ஒன்றை டேராடூன் இந்திய இராணுவ அகாடமியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வீரர் ஒருவர் ஜூஸ் உள்ள கவரை பிரிக்கிறார்.  உள்ளே செங்கல் வடிவில் பழரசமானது உறைந்துள்ளது.  அதனை மேஜையின் ஓரம் வைத்து விடுகிறார். அதன் பின் மற்ற வீரர் சுத்தியலால் அடித்து உடைக்க முயல்கிறார். ஆனால் அது உடையவில்லை.

இதன்பின் கல் போன்று கடினத்தன்மையை அடைந்த உறைந்த முட்டைகளை உடைக்க வீரர்கள் முயல்கின்றனர். சுத்தியலை பயன்படுத்தியும் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு வீரர் முட்டையை எடுத்து ஓங்கி அடிக்கிறார். அப்போதும் அது உடையவில்லை. கடுங்குளிரில் உறைந்துபோன வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றையும் இதேபோன்று உடைக்க முயற்சித்து அது முடியாமல் போகிறது.  இதுபற்றி வீரர் ஒருவர், சியாச்சினில் வெப்பநிலை மைனஸ் 70 டிகிரிக்கும் கீழே உள்ளது. வாழ்க்கை நரகம் போன்று இங்கு இருக்கும் என கூறுகிறார்.  

அந்த வீடியோவில், அவருக்கு பின்னால் வீரர்கள் தங்கியிருக்கும் வெண்பனி போர்த்திய கூடாரம் பளிச்சிடுகிறது. இந்த பகுதியில் மைனஸ் 40 டிகிரியில் இருந்து மைனஸ் 70 டிகிரி வரை குளிர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

Trending News