சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் வித்தியாசமான வீடியோ சிங்கத்தின் குகைக்குள் நுழைய முயலும் இளைஞனின் வீடியோ.
ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில், ஆப்பிரிக்க சிங்கம் வைக்கப்பட்டுளள பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. அது யாரும் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதி. சிங்கம் வைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக அடைப்பிற்குள் 31 வயது நபர் நுழைந்துவிட்டார்.
நவம்பர் 23 ஆம் தேதி ஜி சாய் குமாய் என்ற நபர் நேரு மிருகக்காட்சிசாலைக்கு (Nehru Zoological Park) சென்றார். அங்கு சிங்கம் வைக்கப்பட்டிருக்கும் வளாகத்திற்குள் அவர் செல்ல திட்டமிட்டார். அந்த இடத்திற்கு சென்ற அவர், சிங்கம் இருக்கும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு பாறையில் அமர்ந்துக்கொண்டிருந்தார்.
அவரின் இந்தச் செயலைக் கண்டு பயந்துபோன அங்கிருந்த பார்வையாளர்கள் அலறத் தொடங்கினார்கள். அந்த அதிசய நபரை உள்ளே குதிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டனர். சிங்கம் அங்கிருந்து உள்ளே சென்ற பிறகு நுழைவதற்காகவே காத்துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். வைரங்களைத் தேடி மனிதன் மிருகக்காட்சிசாலையில் நுழைந்த மனிதரால் ஏற்பட்ட சலசலப்பு, உயிரியல் பூங்கா அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வர வைத்தது.
A man was enters into the #Lion enclosure, walking on the boulders of #AfricanLion moat area, at #NehruZoologicalPark, #Hyderabad.
The person was rescued and caught by the #zoo staff and handed over to Bahadurpura police. pic.twitter.com/RO3TW2fh3G
— Surya Reddy (@jsuryareddy67) November 23, 2021
அவரை மீட்டு போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து நேரு விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் இடத்திற்குள் நுழைந்த ஜி சாய், பாறைகளின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில், சிங்கங்கள் சுதந்திரமாக உலாவும் பகுதிக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் (prohibited area) நுழைந்த நபரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் பிடித்து பகதூர்புரா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
குமாயி என்ற அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அவரது செயலுக்கான காரணம் தெரிய வந்தது. காரணம் என்ன தெரியுமா? சிங்கம் இருக்கும் பகுதிக்குள் வைரம் இருப்பதாகவும், அதை தேடுவதற்காக உள்ளே செல்ல முயன்றதாகவும் அவர் கூறுகிறார் என தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மன உளைச்சலில் காணப்படும் அந்த நபரைப் பற்றி அவரது பெற்றோருக்குத் தெரிவிக்கிறோம். அவருடைய மனநிலையையும் பரிசோதிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | நாகப்பாம்பு vs மலைப்பாம்பு: திக் திக் நிமிடங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR