Viral Video: மண்டை உடையும் அளவு சண்டை போட்ட கணவன் மனைவி, காரணம் என்ன

Husband Wife Fight Viral Video: உத்தர பிரதேசத்தின் ஹர்தோய்யிலிருந்து கணவன்-மனைவி இடையே நடக்கும் கடுமையான சண்டையின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2022, 03:11 PM IST
  • ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் பல வித ஆச்சரியமான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
  • கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது.
  • இந்த வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தின் ஹர்தோயியில் எடுக்கப்பட்டுள்ளது.
Viral Video: மண்டை உடையும் அளவு சண்டை போட்ட கணவன் மனைவி, காரணம் என்ன title=

ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் பல வித ஆச்சரியமான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. உத்தர பிரதேசத்தின் ஹர்தோய்யிலிருந்து கணவன்-மனைவி இடையே நடக்கும் கடுமையான சண்டையின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

இருவருக்கும் இடையில் நடு வீதியில், சலசலப்பு ஏற்பட்டு, அது சண்டை வரை செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கணவன் முதலில் மனைவி மீது கையை ஓங்குகிறார். பின்னர் அந்த பெண்ணும் ஆத்திரமடைந்து தாயுடன் சேர்ந்து கணவனை நடுரோட்டில் அடித்து உதைக்கிறார். இவை அனைத்தும் வீடியோவில் தெரிகிறது.

கணவன் மனைவி இடையே சண்டை

உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் நகரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள நடுரோட்டில் கணவன்-மனைவியின் இடையே பயங்கர சண்டை ஒன்று அரங்கேறியுள்ளது. முன்னதாக, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் தனது தாயுடன் கணவர் மீது புகார் அளிக்க மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது கணவரும் அழைக்கப்பட்டார். 

கணவன்-மனைவி நேருக்கு நேர் வந்ததையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நடந்துள்ளது. கணவன் அந்த பெண்ணை அடித்ததையடுத்து, ஆத்திரமடைந்த பெண் தனது தாயுடன் சேர்ந்து கணவனை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் வழக்கில் தாய் மகள் மற்றும் பெண்ணின் கணவர் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ஹலோ நான் பாம்பு வந்திருக்கேன்: தூங்கும் நபரை எழுப்பும் பாம்பு, வைரல் வீடியோ

மண்டை உடையும் அளவு சண்டை போட்டுக்கொண்ட கணவன் மனைவியின் வீடியோவை இங்கே காணலாம்:

கணவனை தாக்கும் மனைவி:

ஹர்தோய் மாவட்டத்தில், இரண்டு பெண்களும் ஒரு இளைஞனும் கடுமையாகச் சண்டையிடும் இந்த சம்பவம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் வாயிலில் நடுச் சாலையில் நடந்துள்ளது. தாயும் மகளும் சேர்ந்து மகளின் கணவனை நன்றாக அடிக்கிறார்கள். பெண்ணின் கணவனும் சளைத்தவன் அல்ல. அவரும் மனைவியை அடிக்கிறார். 

அந்த பெண் தானா பிஹானியின் லோஹர்கெடா கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ கிருஷ்ணாவின் மகள். அவர் தானா மஞ்சிலாவின் பர்சாய் கிராமத்தில் வசிக்கும் சுபீரை மணந்தார். திருமணமான சில வருடங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கணவர் சுபீர் வரதட்சணைக்காக தன்னை மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றியதாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அவர் தாய் வீட்டில் வசித்து வந்தார். பூஜா தனது தாயாருடன் இன்று மகளிர் காவல் நிலையத்திற்கு புகாருடன் வந்திருந்தார். அங்கு அவரது கணவர் சுபீரும் அழைக்கப்பட்டார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு இல்லை:

மகளிர் காவல்நிலையத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தும், சமரச உடன்பாடு ஏற்படாததால் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நோக்கி செல்லத் தொடங்கினர். அப்போது எஸ்பி அலுவலக வாயிலில் தகராறு ஏற்பட்டு, கணவன் மனைவியை அடிக்க ஆரம்பித்தார். பின்னர் பூஜா தனது தாயுடன் சேர்ந்து தனது கணவர் சுபீரை கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த போராட்டத்தை கண்ட பொதுமக்கள் கூடினர். சிலர் சண்டையில் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதற்கிடையில், தகராறு குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மகிளா காவல் நிலைய போலீஸார், 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral News: என்னது போட்டோகிராபர் இல்லையா... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News