ராஜ நாகத்துடன் மல்லுக்கு நின்று உடும்பு... சண்டையில் யாருக்கு வெற்றி - தெறிக்கும் வைரல் வீடியோ

King Cobra vs Monitor Lizard Fight: ராஜ நாகப்பாம்புக்கும், உடும்புக்கும் இடையிலான ஒரு வாழ்வா சாவா போராட்டத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 4, 2023, 01:59 PM IST
  • இது 5 வருடத்திற்கு முன் வெளியான வீடியோவாகும்.
  • தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
ராஜ நாகத்துடன் மல்லுக்கு நின்று உடும்பு... சண்டையில் யாருக்கு வெற்றி - தெறிக்கும் வைரல் வீடியோ title=

King Cobra vs Monitor Lizard Fight: வனவிலங்குகளின் வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளன, விலங்குகளின் விசித்திரமான நடவடிக்கை, சண்டை மற்றும் உணவுக்கான அதன் வேட்டை போன்றவை பார்வையாளர்களை அதிகம் வசீகரிக்கின்றன என தெரிகிறது. இந்த வைரல் வீடியோக்களின் வரிசையில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் ஐந்தாண்டு பழமையான ஒரு வீடியோ மீண்டும் உயிர் பெற்றுள்ளது.ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ மீண்டும் வெளிவந்து, பார்வையாளர்களை மீண்டும் அதிகம் கவர்ந்துள்ளது எனலாம்.

அந்த அளவிற்கு அந்த வீடியோவில் என்ன தான் இருக்கிறது என யோசிக்டகிறீர்களா? அதில், ஒரு வெறிச்சோடிய சாலையில் இரண்டு வலிமையான ஊர்வனவற்றுக்கு இடையேயான சண்டை தான். ராஜ நாகப்பாம்பு மற்றும் உடும்பு தங்களது வாழ்வா, சாவா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த அச்சுறுத்தும் வகையிலான மோதலில் நாகப்பாம்பின் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தும் ஒரு நொடியை இதயத் துடிப்பையே நிறுத்தம் அளவிற்கான காட்சி உள்ளது. மறுபுறம், உடும்பு ராஜா நாகப்பாம்பின் உயர்ந்த வலிமைக்கு அடிபணிந்ததாகத் தோன்றுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் பதற்றத்தின் கூறுகள் சேர்ந்து இந்த வீடியோ விறுவிறுப்பானதாக காணப்படுகிறது. 

வைரல் வீடியோ:

மேலும் படிக்க | Viral Video: குட்டிக்கு தில்ல பார்த்தியா... பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி!

நாகப்பாம்பு, 14 அடி வரை வளரக் கூடியது. அதன் நேர்த்தியான, வலிமை நிறைந்த உடல் மற்றும் தனித்துவமான தலை பார்ப்போரை பிரமிக்க வைக்கும். இதற்கு நேர்மாறாக அந்த உடும்பானது, பார்வைக்கு பல்லியைப் போன்றது, ஒரு பிரம்மாண்டமான உயிரினம், நேர்த்தியான பாம்புடன் ஒப்பிடும்போது அதன் அளவு பெரியது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த வீடியோவை இன்னும் சுவாரஸ்யமாக ஆக்குவத என்றவென்றால், இந்த வீடியோவை வெறிகொண்டு பார்க்கும் அதிக வீச்சு உள்ள பார்வையாளர்கள் படை தான். 10 மில்லியனுக்கும் (1 கோடி) அதிகமான பார்வைகள் மற்றும் அதிகரிக்கக்கூடிய எண்ணிக்கையுடன், இது உலகளவில் பார்வையாளர்கள் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது. கமெண்ட் செக்ஷனும் பலவிதமான கருத்துக்கள் மற்றும் கவர்ச்சிகரமான பார்வையாளர்களின் நுண்ணறிவுகளுடன் நிரம்பியுள்ளது.

ஒரு யூடியூப் பயனர், ராஜ நாகப்பாம்பின் மின்னல் வேக அசைவுகள் மற்றும் அதன் வலிமைமிக்க எதிரியை அடக்கிய அசன் சண்டை முறையின் துல்லியம் ஆகியவற்றைப் பாராட்டினார். "இந்த நாகப்பாம்பு நம்பமுடியாதது. மிக வேகமாகவும் துல்லியமாகவும் இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பார்வையாளர் நாகப்பாம்பின் தனித்துவமான குணங்களைக் கண்டு வியந்து, அதன் விதிவிலக்கான பண்புகளை எடுத்துரைத்தார். "எனக்கு நாகப்பாம்பின் தனித்துவம் பிடிக்கும்" என்று எழுதியிருந்தார்.  "இருவரும் இறுதியில் திகைப்புடனும் குழப்பத்துடனும் காணப்பட்டனர்," என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

சுவாரஸ்யமாக, ஒரு பயனரின் கருத்து ஒரு புதிரான கேள்வியை எழுதியது எனலாம். கமெண்ட் செக்ஷனில் அந்த பயனர்,"பல ஆண்டுகளாக உடும்புகள் குறித்து நான் அறிந்துகொண்ட வரை, பாம்பு விஷத்தில் இருந்து அவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதை நான் கற்றுக்கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

மேலும் படிக்க | 'தானாகவே நடக்கும் ஏணி' : விநோதமான வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News