கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல்

பெண் ஒருவரை கடத்த வந்தவர்களுக்கு ஹீரோ போல் என்ட்ரியாகி ஷாக் கொடுத்த நாய் ஒன்று, அந்த கடத்தலையும் வெற்றிகரமாக முறியடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2023, 09:44 PM IST
  • சிறுமியை கடத்த திட்டம்
  • காரில் வந்த கடத்தல்காரர்கள்
  • ஹீரோபோல் வந்த நாய் வீடியோ வைரல்
கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல் title=

நாய்கள் சிறந்த நண்பர்கள் என சொல்வது உண்டு. வளர்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஆபத்தில் யாரொருவர் இருந்தாலும் அந்த இடத்தில் நாய் இருந்துவிட்டால் அது ஹீரோவாக மாறிவிடும். தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து திருட்டு, கடத்தல் என எதுவாக இருப்பினும் தடுத்துவிடும். சில நேரங்களில் உயிரை கொடுக்கக்கூட தயங்காது. அப்படிபட்ட நாய்களின் வீடியோ இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் இந்த வீடியோவை எல்லாம் பார்த்தால் நாய் மீது இதுவரை பிரியம் கொள்ளாமல் இருந்தால் இயல்பாகவே பிரியம் வந்துவிடும். அந்தளவுக்கு அன்பை நாய்கள் பொழிந்துவிடும்.

மேலும் படிக்க | 'தானாகவே நடக்கும் ஏணி' : விநோதமான வைரல் வீடியோ

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவிலும் நாயின் ஹீரோயிசத்தை நீங்கள் பார்க்கலாம். சிறுமி ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். அது ஒரு வீதிபோல் இருக்கிறது. குறுகலான அந்த வீதியில் அந்த சிறுமி நடந்து செல்ல, திடீரென ஒரு கார் அங்கு மின்னல் வேகத்தில் வந்து சிறுமியின் அருகில் நிற்கிறது. அதாவது அந்த சிறுமியை கடத்தும் நோக்கில் வந்து கார் கதவை கடத்தல்காரர்கள் திறக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை அங்கு மனிதர்கள் நடமாட்டம் இல்லை. அதனால் சிறுமியைத தூக்க சரியான இடம் என்று பிளான் போட்டுள்ளனர். அவர்களின் பிளானில் எந்த தப்பும் இல்லை.

ஆனால் அங்கு நாய் வடிவில் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் வரும் என்று அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆம், கார் கதவு திறக்கப்பட்டு சிறுமியை தூக்க முனையும் சமயத்தில் காருக்கும் சிறுமிக்கும் இடையே வந்து நிற்கிறது நாய். அதற்கு புரிந்துவிட்டது, காரில் இருப்பவர்கள் ஏதோ தவறு செய்யப்போகிறார்கள் என்று. உடனே சத்தமாக குறைத்து அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி, கடத்தல்காரர்களை இறங்கவே விடாமல் துரத்தியடித்துவிட்டது. இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: குட்டிக்கு தில்ல பார்த்தியா... பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி!

நாயின் அபார முயற்சியால் அந்த சிறுமி தப்பிவிட்டார். @pplincctv என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News