சிங்கங்களின் தாக்குதலையே சமாளிச்சிட்டோம், இனி வேற என்ன? மிதப்பில் வரிக்குதிரை

Roaring Lion May Keep Lips Closed: வீடியோ: சிங்கம் காட்டில் மிகவும் ஆபத்தான வேட்டையாடுபவர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு ஆபத்தான வேட்டைக்காரன், ஒருமுறை பாதிக்கப்பட்டவர் எதிரில் வந்தால், அது தப்பிப்பது மிகவும் கடினம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 5, 2023, 12:10 AM IST
  • கில்லாடி ரங்கா, கேடி பில்லாவையே தூக்கி சாப்பிடும் வரிக்குதிரை
  • சிங்கிளா இருந்தாலும் சீறிப்பாயும் காட்டு மான்
  • சரி இப்ப தப்பிச்சாலும் எப்பவாது தானே எதிர்பாராத மாட்டிக்க வேண்டியிருக்கும்
சிங்கங்களின் தாக்குதலையே சமாளிச்சிட்டோம், இனி வேற என்ன? மிதப்பில் வரிக்குதிரை title=

சிங்கங்கள் கூட்டமாக இரையின் பின்னால் துரத்தினால், மாட்டிக் கொண்டவர்களின் நிலைமை அதோகதி தான். தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று சொல்லலாம். இருப்பினும், சிங்கத்தின் சக்தியை மீறிய ஒரு வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. வைரலாகும் இந்த அதிர்ச்சி வீடியோ, காட்டில் தனது கூட்டத்திலிருந்து பிரிந்து அங்கும் இங்கும் அலையத் தொடங்கிய வரிக்குதிரைக்கு ஏற்பட்ட நிலைமையைக் காட்டுகிறது.

என்ன பிரச்சனை வந்தாலும், என்னால சமாளிக்க முடியும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் வீடியோ இது. உலகின் எங்கோ நடக்கும் விஷயத்தை, உடனடியாக நாம் இருக்கும் இடத்திலேயே பார்த்துவிடலாம்.

பல்வேறு செய்திகளைச் சொல்லும் வீடியோக்கள் முதல், விளையாட்டு, வேடிக்கை விநோதம் என வித்தியாசமான வீடியோக்களும், காமெடி வீடியோக்களும் அனைவரையும் ஜாலியாக உணர வைக்கின்றன.

வரிக்குதிரை மீது சிங்கத்தின் தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவில், கூட்டத்திலிருந்து பிரிந்த வரிக்குதிரை எதிரே வந்தபோது பசியால் துடித்த சிங்கங்கள் இரை தேடிக் கொண்டிருந்ததைக் காணலாம். இங்கு சுலபமாக இரை கிடைப்பதைக் கண்டு, சிங்கக்குட்டிகள் மகிழ்ச்சியில் மூழ்கியதாகத் தோன்றியது.

மேலும் படிக்க | Hugging Video: நல்லா தூங்குறவங்களை கட்டிபிடிச்சா என்ன நடக்கும்? வெக்கம் வருமா? இல்லை தூக்கம் வரும்

சிங்கங்கள் எல்லாம், உடனடியாக வரிக்குதிரையைச் சுற்றி வரத் தொடங்கின. இங்குள்ள ஆபத்தைக் கண்டு வரிக்குதிரையும் முழு பலத்துடன் ஓடத் தொடங்கியது. இப்போது சிங்கங்களின் கூட்டம் அதைத் துரத்திக் கொண்டு செல்கிறது. அப்போதுதான் ஒரு சிங்கம், வரிக்குதிரையின் தோளில் இரண்டு பாதங்களையும் வைத்து, கூர்மையான பற்களால் பிடிக்க முயற்சிக்கிறது.

பதில் தாக்குதலை நடத்திய வரிக்குதிரை, சிங்கத்தின் மார்பில் தனது கால்களை பலமாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது 

அனைவரையும் வீழ்த்திய வரிக்குதிரை 
அடுத்து தோன்றிய சில நொடிகளும் திக் திக் என்ற மனதுடனே நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.

மேலும் படிக்க | சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

இப்போது இரண்டாவது சிங்கம் தன் முகத்திலும் பலமான உதை விழுந்ததால் இரையைப் பிடிக்க முயல்கிறது. உதை பலமாக இருந்ததால் சிங்கம் அங்கேயே நின்றது. ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதல்கள் நடந்த,

ஆனால், வரிக்குதிரை சிங்கங்களைத் தாக்கிக் கொண்டே இருந்தது. மறுபுறம், பின்வாங்குவது தான் தமக்கு நல்லது என ஆக்ரோஷமான வரிகுதிரையை விட்டுவிட்டன. சில நிமிடங்களுக்கு முன்னதாக, எளிதான இரையாகக் கருதப்பட்ட வரிகுதிரை அனைவரையும் அடித்து வீழ்த்தும் முயற்சியில் வெற்றிப் பெற்றாதோ இல்லையோ, பின்வாங்க வைக்கும் மாயஜால வித்தையை கற்றுத் தெரிந்து வைத்துள்ளது.

வரிக்குதிரைகள் சிங்கங்களை அடிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர். ஜீப்ராவின் இந்த பிரமாண்ட வீடியோ, Wildlife011 என்ற கணக்கில் இருந்து Instagram இல் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News