சமூக வலைதள பக்கங்களில் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து போன்ற டிக்டாக் பிரபலங்களின் ஆபாச பேச்சு வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன. இதையொட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வீடியோகளில் அவர்களுக்கிடையே உள்ள சண்டையை ஆபாச பேச்சுக்கள் மூலம் யூடியூப் (Youtube) பக்கங்களில் வெளியீடு ஊரறிய செய்து வருகின்றனர். இதை பலர் ரசித்தும், கண்டித்தும் வந்தனர். ஏற்கனவே ஆபாச பேச்சு வழக்கில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் போலவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.
இந்நிலையில் பள்ளி தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதன்படி அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இணையதளத்தில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா (Rowdy Baby Surya) , திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என மக்கள் அதிகார இயக்கம் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம் ஆன்லைன்ல வகுப்புகளுக்காக இணையத்தை பயன்படுத்தும் போது இதுபோன்ற வீடியோக்களை மாணவர்கள் பார்க்க நேரிடும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR