மூடே இல்லாம சரக்கு அடிச்சா மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் இருக்கும்! திருடர்கள் வீடியோ வைரல்

Community Justice: திருடர்களுக்கு சாய்ஸ் கொடுத்த ஒயின் ஷாப் முதலாளி! திருடர்களுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கும் திருடர்கள் மது அருந்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2023, 02:36 PM IST
  • திருடர்கள் வீடியோ வைரல்
  • திருடர்களுக்கு ஆப்ஷன் கொடுத்த கடை அதிபர்
  • திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி இருக்கும்?
மூடே இல்லாம சரக்கு அடிச்சா மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் இருக்கும்! திருடர்கள் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: திருடர்களுக்கு தேள் கொட்டினா எப்படி இருக்கும்? சரக்கடிச்ச மாதிரி தான் இருக்கும் என்று கலாய்க்கிறது வைரலாகும் வீடியோ ஒன்று. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடையை உடைத்து மதுபானங்களை திருடிய திருடர்களை தேடி கண்டுபிடித்துவிட்டனர். அதன் பிறகு நடைபெற்ற விஷயம் தான் இதுவரை கேள்விப்படாத ஒன்று. அகப்பட்ட திருடர்களை யாரும் தர்ம அடி போடவில்லை. திருட்டு வேலை பார்த்தவர்களுக்கு, அவர்கள் திருடிய மதுவையே கொடுத்து குடிக்கச் சொன்னால் எப்படி இருக்கும்?

ஆம், உங்களுக்கு மட்டுமல்ல, திருடிய அப்ரண்டிஸ்களுக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆனால், ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்ஸ், திருடிட்டு போனது குடிக்கத் தானே, குடிச்சுக்கோ, ஆனால் இனி மேல் திருடினா பிச்சுப்புடுவோம் பிச்சு என்று மிரட்டும் வீடியோ வித்தியாசமானதாக இருக்கிறது.

மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

ஃப்ரியா குடுத்தாலும், சரக்கடிக்க சங்கடப்படும் நிலைமையில் எத்தனை பெக் தான் போடறது? என்று அலுத்துக் கொள்வது அவர்களின் முகத்திலே தெரிகிறது. இப்படி மூடே இல்லாம சரக்கு அடிச்சாலும் போதை ஏறுமா என்ன? திருடர்களுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கும் திருடர்கள் மது அருந்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

மதுவை குடிக்க வற்புறுத்தும் சம்பவமும், வேறு வழியில்லாமல் பாட்டிலை ‘ரா’வாக குடிக்கும் குடிமகன்களின் பரிதாப முகமும் இணையத்தி வைரல் ஆகியது.

மேலும் படிக்க | 18 அடி பாம்பா இருந்தாலும், முதலையை அப்படியே முழுங்கினா செரிமானம் ஆகாது! வைரல் வீடியோ

இந்த வீடியோ @githii என்ற எக்ஸ் தளத்தின் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சுமார் 14,000 யூனிட் உள்ளூர் கரன்சி ($900) மதிப்புள்ள மதுபானத்தை திருடர்கள் ஒரு கடையை உடைத்து திருடியுள்ளனர். அடுத்த நாள் அவர்களை தேடிப் பிடித்த கடை உரிமையாளர் அவர்களுக்கு ஒரு விருப்பத்தை அளித்தார்.

அதன்படி திருடப்பட்ட அனைத்து மதுவையும் ஒரே நேரத்தில் குடிக்கவும் அல்லது "உம்பகத்தி (Umphakathi) என்ற சமூக நீதி அல்லது விழிப்புணர்வு நடவடிக்கையைக் குறிக்கும். திருடர்களோ, ஜாலியாக சரக்கடிக்க முடிவு செய்தார்கள். திருடர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

இந்த வீடியோவுக்குக் பரவலான எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. சில நெட்டிசன்கள் மகிழ்ந்தனர், மற்றவர்கள் திருடர்களை தண்டிக்கும் முறைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | ஜாலியா போட்டோவுக்கு போஸ் குடுக்க உங்களுக்கு நேரம் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News