Bizarre Video: இப்படியொரு வளைகாப்பை யாரும் பாத்திருக்கவே முடியாது! அதிர வைக்கும் வீடியோ வைரல்

Viral baby shower: ஐந்து குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் அப்பாவாக திட்டம்! டிக்டாக் பிரபலத்தின் விநோதமான வளைகாப்பு நிகழ்ச்சி சமூக ஊடகங்களை மட்டுமல்ல, உலகையே அதிர வைத்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 20, 2024, 03:10 PM IST
  • ஐந்து பெண்களுக்கு ஒரே மேடையில் வளைகாப்பு
  • இது கூட்டு குடும்ப நிகழ்ச்சியல்ல
  • குழந்தைகளின் அப்பா ஒருவர் தான், ஆனால் அம்மாக்களோ 5
Bizarre Video: இப்படியொரு வளைகாப்பை யாரும் பாத்திருக்கவே முடியாது! அதிர வைக்கும் வீடியோ வைரல் title=

Unbelievable Baby Shower Function: பார்க்கும் அனைவரையும் நிஜமாகவே அதிர வைக்கும் வைரல் வீடியோ ஒன்று பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த உலகத்தைச் சுற்றியுள்ள வினோதங்களின் ஒரு நிகழ்வாக, TikTok நட்சத்திரம் ஒருவர், தனது குழந்தைகளை கருவில் சுமக்கும் ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு கூட்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த வளைகாப்பு விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Gen-Z TikTok பிரபலம், தனது குழந்தைகளை சுமந்துக் கொண்டிருக்கும் ஐந்து பெண்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். உண்மையில், பலதார மணம் பெண்களின் கண்ணியத்தை மீறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் பேசிவரும் நிலையில், ஒருவர், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் கருவுறச் செய்திருப்பது விநோதமான செயலாக இருக்கிறது.

இதுவரை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது என்பது போன்ற விஷயத்தையே பலரும் கேட்டிருப்பார்கள். ஆனால், தன்னுடைய குழந்தைகளை சுமக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு ஆண், ஒரே மேடையில் வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சியை இதுவரை யாரும் பார்த்தோ கேட்டிருக்கவோ முடியாது. இப்படி மிகவும் விசித்திரமான நிகழ்வாக இருப்பதால் இந்த வளைகாப்பு கொண்டாட்டம், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகிறது.

நியூயார்க் நகரத்தில் வசிக்கும் Zeddy Will, 22 வயது இளைஞர், TikTok செயலியில் பிரபலமான இசைக்கலைஞர், இவர் தான் ஐந்து பெண்களுக்கும் ஒன்றாக வளைகாப்பு நடத்திய 5 குழந்தைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி, ஜனவரி 14 ஆம் தேதி நியூயார்க் குயின்ஸில் நடைபெற்றது.

மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...

கர்ப்பிணி பெண்களில் ஒருவரான லிஸி "நாங்கள் இப்போது Sister Wives என்று நினைக்கிறேன்," என்று தலைப்பிட்டு வளைகாப்பு வீடியோ பதிவிட்டுள்ளார். Sister Wives என்பது ஒரு பிரபலமான பயணம் மற்றும் வாழ்க்கை நிகழ்ச்சியாகும், இது பலதார மணம் கொண்ட குடும்பத்தின் வாழ்க்கையை காட்டுகிறது.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழீல் ஆஷ்லே மற்றும் உயிரியல் தந்தை ஜெடி வில் ஒன்றாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர், அதில் "குட்டி ஜெடி வில்ஸ் 1-5 வரவேற்கிறோம்." என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த வீடியோவில், ஆஷ்லீக், போனி பி, கே மெரி, ஜிலீன் விலா மற்றும் இயன்லா கலிஃபா கலெட்டி ஆகிய ஐந்து அம்மாக்கள் "ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டனர்" இது குழந்தைகளுக்கு நல்லது என்று ஐந்து குழந்தைகளின் தந்தை ஆஷ்லே கூறுகிறார்.  

மேலும் படிக்க | "நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" ஸ்ரீரங்கத்தில் தடபுடல் வரவேற்பு

"எங்கள் அழகான குடும்பத்தைப் பாருங்கள்!" என்று பதிவிட்டுள்ள வீடியோவில், "நாங்கள் எங்கள் குழந்தை அப்பாவை நேசிக்கிறோம்! எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நாங்கள் அழிக்க மாட்டோம்! எங்கள் குடும்பங்கள் இதை ஏற்றுக்கொண்டன!" என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோ வைரலானாது தொடர்பாக Zeddy Will என்ன சொல்கிறார் தெரியுமா? "சமூகம் மாறிவிட்டது, அதையொட்டி நவீன உறவுகளின் இயக்கவியல் மாறிவிட்டது. தனிப்பட்ட முறையில் உறவுகளை மறுவரையறை செய்வது இயல்பாகிவிட்டது, எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடிய ஒரு அணுகுமுறை தேவை. சமூக அழுத்தங்களில் இருந்து விலகி, இணக்கமாக இருக்க வேண்டும். ."

பல தார மண குடும்பங்கள்
பொதுவாக பலதார மணம் கொண்ட குடும்பத்தில் தான், ஒரு கணவன், பல மனைவிகள் மற்றும் அவர்களது குழந்தைகளைக் கொண்ட குடும்பமாக இருக்கும். அனைத்து மனைவிகளும் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக வாழலாம் அல்லது ஒவ்வொருவரும் தனித்தனி குடும்பமாக வாழ்வார்கள். ஆனால்,  Zeddy 5 பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்தாலும், திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்பதால், இது பலதார மண குடும்பமாகவும் இருக்காது, கூட்டுக் குடும்பமாகவும் இருக்காது.  

மேலும் படிக்க | Ramar Photo: அயோத்தி ராமரின் முதல் புகைப்படம்.. கருவறையில் வைக்கப்பட்ட சிலை - கண்கொள்ளாக் காட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News