Viral Video: சிவனடியார்களை மிஞ்சிய ஆடு - கங்கை கரையில் சிவ வழிபாடு!

கோயிலில் பக்தர்களுடன்,  ஆடு ஒன்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்யும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2022, 08:11 PM IST
  • இந்த வீடியோவை டேவிட் ஜான்சன் என்ற ட்விட்டர் பதிவர் முதலில் பதிவிட்டுள்ளார்.
  • இந்த வீடியோ உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • அந்த சிவன் கோயில் கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Viral Video: சிவனடியார்களை மிஞ்சிய ஆடு - கங்கை கரையில் சிவ வழிபாடு! title=

விலங்குகளின் வித்தியாசமான செயல்பாடுகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. விலங்குகள் வேட்டையாடுவது, மனிதர்களும் விளையாடுவது, சாலையில் விநோதமாக செயல்களில் ஈடுபடும் பல வீடியோக்களை நீங்களும் கடந்துவந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வீடியோவில் இந்த விலங்கின் பக்தியை கண்டால் கல்லும் கரைந்துவிடும். ஒரு கோயிலில் தெய்வத்திற்கு தீபாராதனை காட்டும்போது, ஆடு ஒன்று  மண்டியிட்டு கடவுளை வணங்கும் செயல்தான் இப்போது, வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | வகுப்பிற்குள் நுழைந்த குரங்கு செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்

இந்த கோயில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. டேவிட் ஜான்சன் என்ற ட்விட்டர் பயனர் இந்த வீடியோ பதிவிட்டுள்ளார். அத்துடன்,"கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ஆனந்தேஷவர் கோயிலில் பக்தர் ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. கோயில் தெய்வத்திற்கு அப்போது தீபாராதனை செய்யப்பட்டு வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

அந்த ஆடு, பக்தர்களோடு பக்தராக இருந்து சன்னதி முன்னர் மண்டியிட்டு, தலை வணங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அங்கிருந்தவர்கள் எந்த ஒரு இடையூறையும் அது அளிக்கவில்லை, மற்றவர்களும் அந்த ஆடு-ஐ தொந்தரவு செய்யவில்லை. அந்த ஆடு யாருக்கு சொந்தமானது அல்லது எத்தனை நாட்களாக அந்த கோயிலில் இருந்து வருகிறது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோயிலான, பாபா ஆனந்தேஷ்வர் கோயில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வம்பிழுத்த பெண்ணை வெச்சி செஞ்ச குரங்கு: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News