காதலி கொடுத்த இன்ப அதிர்ச்சி: குஷியில் ஷாக் ஆன காதலன், வைரல் வீடியோ!!

Lovers Viral Video: வேறு ஊரில் இருக்கும் காதலி திடீரென கண் முன் தோன்றியதால் திக்குமுக்காடிப்போன காதலனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2023, 11:53 AM IST
  • காதல் என்பது ஒரு அதிசயமான, அபூர்வமான உணர்வு.
  • காதலில் விழுந்த சிலருக்கு தினமும் தனது காதலன் / காதலியை காணும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது.
  • ஆனால், சிலருக்கோ அப்படி இருப்பதில்லை.
காதலி கொடுத்த இன்ப அதிர்ச்சி: குஷியில் ஷாக் ஆன காதலன், வைரல் வீடியோ!! title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

காதல் என்பது ஒரு அதிசயமான, அபூர்வமான உணர்வு. காதலில் விழுந்த சிலருக்கு தினமும் தனது காதலன் / காதலியை காணும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. ஆனால், சிலருக்கோ அப்படி இருப்பதில்லை. தனது காதலன் / காதலி வேறு இடத்தில் இருப்பவர்கள், அவர்களை எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள். காதலர்களின் பல வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பகிரப்படுகின்றன. 

சமீபத்திலும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் காதலர்களின் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் தனது காதலனை ஆச்சரியப்படுத்தும் வகையில், வேறு ஊரில் இருக்கும் காதலி திடீரென அவரை காண வருகிறார். அவரைக் கண்டதும் அந்த காதலனின் ரியாக்ஷன் உள்ளத்தை அள்ளும் வகையில் உள்ளது.  

மேலும் படிக்க | viral Video: முதலைக்கு சவால் விட்ட முதியவருக்கு நேர்ந்த கதி: நீங்களே பாருங்க..!

இந்த வீடியோவை காண்பவர்களின் இதயம் மகிழ்ச்சியால் குதூகலிக்கிறது. காதலனின் உள்ளக்களிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இங்கிலாந்தில், பல இடைநிலைப் பள்ளிகள் சம்மர் பால் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அந்த பள்ளியாண்டின் நிறைவை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. அப்படி ஒரு நிகழ்வின் போது, இந்த காதலி தன்னுடைய காதலனுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க நீண்ட தூரம் பயணித்து அவரிடம் வருகிறார். 

வீடியோவின் துவக்கத்தில், அந்த இளைஞன், கோட் சூட் அணிந்து, கையில் ஒயின் கிளாஸுடன் கேமராவுக்கு போஸ் கொடுப்பதை காண முடிகின்றது. சில வினாடிகளுக்குப் பிறகு, அழகான நீல நிற உடையணிந்த அவரது காதலி பின்புறத்திலிருந்து தோன்றி அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறார்.

இளைஞன் முதலில் ஏதோ ஒரு பெண் தன்னை கேலி செய்வதாக நினைக்கிறார். ஆனால், அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும், அது அவரது காதலி என்பது தெரிந்து மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகிறார். அவர் உணர்ச்சிவசப்படுகிறார். அவரது உணர்ச்சிகள் இந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகின்றன. 

காதலனின் கியூட் ரியாக்ஷன் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @apnizindagi1322

சிரித்துக்கொண்டே காதலி இளைஞனை கட்டி அணைக்கிறார். எனினும், இளைஞனால் இன்னும் தனது ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ஒரு கணத்தில், அவர் வைன் கிளாஸைக் கூட தரையில் போட்டு விடுகிறார். இந்த அழகான வீடியோ பல சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு, நெட்டிசன்களிடமிருந்து பெருங்களிப்புடைய கமெண்டுகளை குவிந்து வருகின்றது. இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ apnizindagi1322 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அந்த இளைஞனுக்கும் அவரது காதலிக்கும் இடையில் இருக்கும் காதல் நம் முகங்களிலும் புன்னகை பூக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | மானை கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்! இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News