வாய்க்காலில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு, திக் திக் வைரல் வீடியோ

Snake video: ராட்சத மலைப்பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் இந்த மலைப்பாம்பு வாய்க்காலில் மறைந்திருப்பதை காணலாம், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 12, 2023, 05:28 PM IST
  • மலைப்பாம்பு ஒன்று வாய்க்காலில் சிக்கிய வீடியோ.
  • இது ஒரு சிலிர்க்க வைக்கும் காணொளி ஆகும்.
வாய்க்காலில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு, திக் திக் வைரல் வீடியோ title=

இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. அந்தவகையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | கேட்டானே ஒரு கேள்வி...மேடையில் மணமகன் செய்த வேலை: கலாய்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

வைரலாகி வரும் இந்த அதிர்ச்சி வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று வாய்க்காலில் சிக்கியதால், சிலர் அதை கயிற்றால் கட்டி வெளியே இழுத்தனர். மக்கள் எப்படி கயிற்றை வடிகாலில் தொங்கவிட்டனர் என்பதை வீடியோவில் காணலாம். மலைப்பாம்பு அதில் வாயை வைத்தவுடன், கயிற்றை இறுக்கமாகப் பிடித்து மேலே இழுக்கிறது, இதனால் மலைப்பாம்பின் வாய் கயிற்றில் கட்டப்படுகிறது. இதையடுத்து அதை வெளியே அழைத்துச் செல்ல பொதுமக்கள் முயன்றனர்.

வாய்க்காலில் சிக்கி இருக்கும் மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 இது ஒரு சிலிர்க்க வைக்கும் காணொளி ஆகும். இது சமூக ஊடக தளமான Instagram இல் Wildlife011 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது, இந்த வீடியோவை இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேர் பார்த்துள்ளனர், அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடியோவை விரும்பி அதற்கு பலவித கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | முட்டையை அபேஸ் செய்ய வந்த பெண்: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News