’வாடா செல்லம்’ மிட்டாய் பாக்ஸில் ஈஸியாக நாகப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர் - வைரல் வீடியோ

தெருவில் இருந்த நாகப்பாம்பு ஒன்றை மிட்டாய் பாக்ஸில் பொறுமையாக அடைத்த தீயணைப்பு வீரரின் வீடியோ இணையத்தில் சுமார் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 3, 2023, 06:42 PM IST
  • நாகப்பாம்பு வீடியோ வைரல்
  • யூடியூப்பில் 12 மில்லியன் வியூஸ்
  • பாம்புகளை எப்படி பிடிக்கலாம்?
’வாடா செல்லம்’ மிட்டாய் பாக்ஸில் ஈஸியாக நாகப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர் - வைரல் வீடியோ title=

பாம்புகளில் பல வகை இருந்தாலும், சில பாம்பு இனங்களுக்கு மட்டுமே விஷத்தன்மை இருக்கிறது. ஆனால் எந்தெந்த பாம்புகளுக்கு விஷம் இருக்கிறது என்பது பெரும்பாலும் பரவலாக தெரியாது என்பதால் எந்த பாம்பை பார்த்தாலும் குலை நடுங்கிப்போய்விடுவார்கள் மக்கள். இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், பாம்புக்கு தான் முதலில் மனிதர்களை பார்த்தவுடனேயே பயம் வரும். பயத்தில் தன்னை தற்காத்துக்கொள்ளவே முற்படும். இது தெரியாமல் பாம்பு தன்னை கொத்து வருகிறது என மக்கள் அரண்டுபோய் அதனை அடித்து கொன்றுவிடுகிறார்கள்.

மேலும் படிக்க | பீகாரில் துப்பிய குட்காவை நக்கி சுத்தம் செய்யுமாறு அடித்த ஜவான் - இணையத்தில் வீடியோ வைரல்

இதில் பாவம் பாம்புகள். அதனின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டு செயல்பட்டால் பாம்புகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பாம்புகளை கொன்றால் உயிரியல் கட்டமைப்பும் பாதிக்கப்படும். அதேநேரத்தில் பாம்புகள் குறித்து விழிப்பாக இருப்பது அவசியம். நாம் கவனக்குறைவால் பாம்புகளிடம் சென்றால் அவை உடனடியாக தங்களை தாக்க  ஏதோ வந்துவிட்டதாக நினைத்து கொத்திவிடும். விஷம் அதிகமான பாம்பு என்றால் சில நொடிகளில் உயிரிழப்புகள் ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது.

இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும்? அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. புதுச்சேரியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் நாகப்பாம்பு ஒன்றை வெறும் மிட்டாய் பாக்ஸை வைத்தே பிடிக்கிறார். அதனின் கவனத்தை சிதறடித்து மெதுவாக மிட்டாய் பாக்ஸூக்கு பாம்பை கொண்டு வருகிறார். பின்னர் மெதுவாக உடலை முழுவதுமாக உள்ளே நுழைத்துவிடுகிறார். இந்த வீடியோ மட்டும் இணையத்தில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பாம்புகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்துள்ள தீயணைப்புத்துறையினர், இது சூழலியல் சுழற்சிக்கு அத்தியாவசியமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: குசும்பு பிடிச்ச குட்டி யானைப்பா இது... ஒரு இடத்துல நிக்க மாட்டியா...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News