Viral Video: விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் விரும்பி பார்க்கப்படுகின்றன. குறிப்பாக பாம்பின் வீடியோகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இள்ளது. பெரும்பாலும், பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை வீடியோக்களை நாம் அதிகம் பார்த்துள்ளோம். பாம்பும் கீரியும் இயற்கை எதிரிகள். இவை இரண்டும் எங்கு பார்த்துக்கொண்டாலும் சண்டை நிச்சயம்.
ஆனால், சமீபத்தில் வைரல் ஆகி வரும் வீடியோவில் வித்தியாசமான சண்டை ஒன்றை காண முடிகின்றது. ஆம்!! இந்த வீடியோவில் பாம்பு மற்றும் தேளின் சண்டையை காண முடிகின்றது. பாம்பு சில சமயமும் தேள் சில சமயமும் இந்த சண்டையில் முன்னிலை வகிக்கின்றன. சில இடங்களில் பாம்பு தன் நீண்ட தோற்றத்தால் தேளை மடக்கினாலும், தேளும் சளைக்காமல் பல இடங்களில் பாம்புக்கு சரியான போட்டியை அளிக்கின்றது.
பாம்புக்கும் தேளுக்கும் சண்டை:
இந்த வீடியோவில், 7 அடி நீளமுள்ள பாம்பு 15 சென்டிமீட்டர் நீளமுள்ள தேள் முன் திண்டாடிப்போவதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. தேள் தனது கொடுக்கின் உதவியுடன் ஏழு அடி நீளமுள்ள பாம்பை தனது பிடியில் வைத்திருப்பதைக் காண முடிகின்றது. தேளின் கொடுக்கின் முன்னால் பாம்பால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும், இந்த 9 வினாடி வீடியோ கிளிப்பில், பாம்பு தேளைப் பிடித்திருக்கிறதா அல்லது தேள் பாம்பைப் பிடித்திருக்கிறதா என்று யூகிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது.
பாம்பு தேள் சண்டை வீடியோவை இங்கே காணலாம்:
பாம்பு தேளை விட உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தேள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பாம்புடன் சரி நிகர் சமானமாக சண்டை இடுவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது. அது பாம்புக்கு இரையாக மாறத் தயாராக இல்லை என்பதும் தெளிவாகிறது.
மேலும் படிக்க | மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!
இணையத்தில் வைரல் ஆகும் இந்த வீடியோ, ‘எதிரியை வெல்லப் போகிறாயா இல்லையா என்பதை தீர்மானிக்க உன் உருவமும், அளவுகளும் முக்கியமல்ல, உன்னுடைய தனிச்சிறப்பும் மன உறுதியும் தான் எதிராளியை வெல்ல முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.’ என்ற பாடத்தை நமக்கு புகட்டுகிறது.
பாம்பு மற்றும் தேளின் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் rijeshkv_80 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 11 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும், 12 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
‘இரண்டையும் பார்த்த பிறகு, பாம்பு தேளைப் பிடித்ததா அல்லது தேள் பாம்பைப் பிடித்ததா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.’ என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இது ஒரு ஆபத்தான சண்டையாகத் தெரிகிறது’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘கடைசியில் என்ன நடந்தாலும் இந்த சண்டை முழுவதிலும் தேள் தான் முன்னிலையில் இருந்துள்ளது’ என ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ