Fashion of Corona Period: மாஸ்குக்கு மேலே நகை அணிந்து ஃபேஷன் காட்டும் பெண்

இந்த கொரோனா காலத்தில் திருமணம் ஒன்றில் கலந்துக் கொண்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. திருமணத்தில் கலந்துக் கொண்டதற்காக புகைப்படம் வைரலாகவில்லை. கொரோனா காலத்திலும் அவர் முகக்கவசத்தின் மீது நகை அணிந்திருக்கும் விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2021, 01:06 PM IST
  • மாஸ்குக்கு மேலே நகை அணிந்து ஃபேஷன் காட்டும் பெண்
  • கொரோனா வந்தால் என்ன? ஃபேஷன் காட்டுவது தவறா?
  • ஆபரணங்கள் அணிவதில் நவீனத்துவம் காட்டும் பெண் சமூக ஊடகங்களில் வைரல்
Fashion of Corona Period: மாஸ்குக்கு மேலே நகை அணிந்து ஃபேஷன் காட்டும் பெண் title=

இந்த கொரோனா காலத்தில் திருமணம் ஒன்றில் கலந்துக் கொண்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. திருமணத்தில் கலந்துக் கொண்டதற்காக புகைப்படம் வைரலாகவில்லை. கொரோனா காலத்திலும் அவர் முகக்கவசத்தின் மீது நகை அணிந்திருக்கும் விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த புகைப்படத்தை பலரும் ரசித்துள்ளனர். 'ஆஹா, என்ன ஒரு யோசனை, சூப்பர் ஐடியா' என்று சொல்லி பலரும் புகைப்படத்தை பகிர, சமூக ஊடகங்களில் தனது ஃபேஷனுக்காக வைரல் ஆகிவிட்டார் இந்த பெண்மணி.

இந்த வேடிக்கையான புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா (IPS Dipanshu Kabra) ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அந்தப் பதிவில் ஒரு பெண் முகக்கவசத்தின் மேல் நகை அணிந்திருப்பதைக் காணலாம்.

கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியா தத்தளிக்கிறது, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 காரணமாக தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து வருகிறார்கள், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெரும்பாலான நகரங்களில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read | மாணவியின் ஆடையை விமர்சித்த ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இப்படி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இது திருமண சீசனும் கூட… ஆனால் முன்கூட்டியே ஏற்பாடு செய்த திருமணங்களை நடத்துவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரும்பாலான மாநில அரசுகள் திருமணங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. அதன்ன்படி, திருமண விழாவில் மொத்தம் 50 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும். அப்போது, மக்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்ற வேண்டும். 

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் அலங்காரம் ஒப்பனை மற்றும் ஆபரணங்கள் அணிவதில் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்த வைரலாகும் புகைப்படம் உணர்த்துகிறது. இதனால்தான் சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த முகக்கவசத்தின் மீது ஆபரணம் அணிந்த புகைப்படம்

Also Read | கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - EPS and OPS தரப்பு மோதல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News