சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?

Viral video : சூரிய கடவுளுக்கு பாதிப்பு எனக்கூறி ஒரு கும்பல் சோலார் பேனலை அடித்து உடைக்கிறது என இணையத்தில் வைரலாக வீடியோ பரவிக் கொண்டிருகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 11, 2024, 12:16 PM IST
  • சோலார் பேனல் மீது ஒரு கும்பல் தாக்குதல்
  • சூரிய கடவுளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா?
  • வைரலாகியிருக்கும் வீடியோவின் பின்னணி
சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா? title=

சூரிய பகவானுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் சோலார் பேனலை ஒரு கும்பல் அடித்து உடைக்கிறது, ஐயோ என்ன கொடுமை பாருங்கள், இது நடந்தது இந்தியாவில் என கேப்சன் போட்டு எக்ஸ் உள்ளிட்ட சமூக பக்கங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவை பார்க்கும்போது, இந்தியாவில் என்றால் இது நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்ற எண்ணமும் தோன்றுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் நடைபெற்றதாக சொல்லி சோலார் பேனலை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ பரவவிட்டிருப்பதால், இந்தியாவில் இருப்பவர்களே இது உண்மை என நம்பி, அந்த வீடியோவில் இருப்பவர்களை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்!

இதற்கு காரணம், மூட பழக்க வழக்கங்களை கடவுளின் பெயரை பயன்படுத்தி வட இந்தியாவில் செய்யப்படும் வியாபாரம் அதிகம். அப்பாவி மக்களை ஏமாற்றி சம்பிரதாயம், சடங்குகள் என கூறி காசு பார்ப்பவர்கள் ஏராளம். மக்களும் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என நினைத்து போலி சாமியார்கள் சொல்வதை எல்லாம் நம்பி, அதனை அப்படியே செய்கின்றனர். இது அங்கு மட்டும் தான் நடக்கிறதா? என்றால் இல்லை. இந்தியா முழுமைக்கும் நடக்கிறது என்றாலும் வட மாநிலங்களில் மூட நம்பிக்கைகளின் வீரியம் கொஞ்சம் அதிகம். அதனடிப்படையிலேயே இந்த வீடியோவுக்கு இப்படியொரு கேப்டன்போட்டு பரவ விட்டதும் பலரும் உண்மை என நம்பிக் கொண்டனர். 

உண்மையை ஆராய்ந்து பார்க்கும்போது மக்கள் சூரிய கடவுளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக சோலார் பேனலை அடித்து உடைக்கவில்லை. தாங்கள் செய்த வேலைக்கு முறையான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டு, கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் சோலார் பேனலையும் அடித்து உடைத்திருக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. இந்த வீடியோவை திரித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு போலியாக கேப்சன்களையிட்டு பரவ விட்டுள்ளனர். அதனை சோஷியல் மீடியா நெட்டிசன்களும் உண்மையென நம்பி லைக்குகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

சோலார் பேனலை சூரிய கடவுளை பாதுகாப்பதற்காக மக்கள் அடித்து உடைக்கிறார்கள் என்ற கேப்சனிடப்பட்ட இந்த வீடியோ இப்போது உலகளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இப்படி போலியாக பரப்பப்பட்ட வீடியோவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதுடன், உண்மையில் என்ன நடந்தது என்ன என்று கூறி விளக்கங்களையும் அளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க |  கதவை தட்டி கிலிகாட்டிய பாம்பு: வீடியோ எடுத்தவனை சும்மா விடுமா? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News