அம்மானா சும்மாவா? குட்டி எலிக்காக பாம்பை பந்தாடிய தாய் எலி: வைரல் வீடியோ

தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குட்டி எலியை விட்டுவிட்டு, பாம்பு திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 04:57 PM IST
  • தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • ஒரு தாய் தன் குழந்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அம்மானா சும்மாவா? குட்டி எலிக்காக பாம்பை பந்தாடிய தாய் எலி: வைரல் வீடியோ title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்கிறாள். அவர்களுக்காக உலகின் அனைத்து துக்கங்களையும், வலிகளையும் தான் தாங்கிக்கொள்கிறாள். எந்த தீங்கும் தன் குழந்தைகளின் அருகில் கூட செல்லாமல் பார்த்துக்கொள்கிறாள். 

ஒரு தாய் தன் குழந்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ. இதில், ஒரு எலி, தனது குழந்தையாகிய குட்டி எலியைக் காப்பாற்ற ஒரு பெரிய விஷப்பாம்புடனும் போராடுகிறது. பார்ப்பவர்களை இறுதி வரை பார்க்க வைப்பதில் இந்த வீடியோ வெற்றி பெறுகிறது என்றுதான் கூற வேண்டும். 

குட்டி எலிக்காக பாம்புடன் மோதிய அம்மா எலி

சாலையோரத்தில் இருக்கும் பாம்பு (Snake Video) ஒன்று, ஒரு எலி குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேகமாக செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. குட்டி எலியைக் காப்பாற்ற, தாய் எலி, பாம்பின் வாலை தொடர்ந்து தாக்குகிறது. அது பாம்பின் வாலை தொடர்ந்து கடிக்கிறது. 

தாய் எலியின் உறுதிக்கு முன்னால் பாம்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குட்டி எலியை விட்டுவிட்டு, பாம்பு திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கின்றது. எலி கடைசி வரை அந்த பாம்பை துரத்துகிறது. பாம்பு அங்கிருந்து சென்றது உறுதியானதும், அது தன் குழந்தையிடம் வந்து அதை வாயில் கவ்விக்கொண்டு தன் பொந்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. 

இணையவாசிகளை உருக வைத்த அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

ALSO READ | Snakes Bite: பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்! 125 பாம்பு ஒண்ணா கடிச்சா என்னவாகும்? 

தாயின் அன்பை விட பெரியது எதுவும் இல்லை: இணைய வாசிகள் உருக்கம்

ஒரு தாய் தன் குழந்தைக்காக எத்தனை ஆபத்தான எதிரியையும் எதிர்த்து நிற்பாள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த ஊதாரணம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை (Viral Video) இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

மனதை இளக வைக்கும் இந்த வீடியோவை, ஐஎஃப்எஸ் அதிகாரி சுரேந்திர மெஹ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவின் தலைப்பில், அவர், "ஒவ்வொரு உயிரினமும் தனது இருப்பைக் காப்பாற்ற போராடுவது இயல்பு." என்று எழுதியுள்ளார். 

இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த ஒரு பயனர், "தாயின் அன்பையும் அக்கறையையும் விட இந்த உலகில் எதுவும் பெரியது இல்லை." என்று எழுதியுள்ளார்.

ALSO READ | Puzzle: உங்களுக்கு ‘கழுகு’ பார்வை உள்ளதா; படத்தில் எத்தனை ‘யானைகள்’ உள்ளன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News