ராட்சத பூசணிக்காயில் புட்பால் ஆடும் யானை: ViralVideo

ராட்ச யானை ஒன்று பூசணிக்காயில் புட்பால் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தந்தங்களில் பூசணிக்காயை குத்தி உடைத்து விளையாடுவதை பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2023, 01:46 PM IST
  • பூசணிக்காயுடன் விளையாடும் யானை
  • தந்தத்தில் குத்தி ஜாலியாக விளையாடுகிறது
  • இணையத்தில் இந்த வீடியோ வைரல்
ராட்சத பூசணிக்காயில் புட்பால் ஆடும் யானை: ViralVideo title=

யானைகளின் வீடியோவை பார்க்கும்போது எப்போதும் அழகாக இருக்கும். இணையத்தில் யானைகளின் சுட்டி வீடியோக்களும் அதிகம் கொட்டிக்கின்றன. இப்போது யானை ஒன்று ஜாலியாக விளையாடும் சூப்பரான வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் அக்டோபர் மாதங்களில் ஹாலோவீன் பண்டிகை கொண்டாடப்படும். இது விலங்குகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் விளையாட்டாகவும். இதில் கலந்து கொள்ளும் விலங்குகள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும். அப்படியான இந்த பண்டிகையின்போது யானை பூசணிக்காயை குத்தி உடைத்து விளையாடும் வீடியோ அதிகம் கவனம் பெற்று வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | இறந்த தாய்..எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த வைரல் வீடியோ

அமெரிக்காவில் உள்ள மில்வாக்கி கவுன்டி மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று யானைகள் ராட்சத பூசணிக்காயை அடித்து நொறுக்கும் வீடியோ தான் அது.  ஒரு நிமிடம், 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை மில்வாக்கி கவுண்டி மிருகக்காட்சி சாலை அக்டோபர் 26 அன்று அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோவில், மூன்று ஆப்பிரிக்க யானைகள் பூசணிக்காயை தங்கள் தந்தங்களால் குத்தி உடைத்து, அவற்றை தங்களது கால் மற்றும் துதிக்கையின் உதவியால் சில்லுகளாக மாற்றுகின்றன. பின்னர் அவற்றை எடுத்து வாயில் போட்டு ரசித்து ருசிக்கும் காட்சி பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது.

யானைகள் எப்போதும் குழந்தைகளை போல் நடந்து கொள்ளும் என்று சொல்வார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது அது உண்மைதான் என்று தோன்றும்.பார்ப்பதற்கு பெரிய விலங்குகளாக இருந்தாலும் பூசணிகளை உடைத்து சாப்பிடும் முறைகள் எல்லாம் அவற்றின் குழந்தைத்தனத்தையே வெளிப்படுகிறது. இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ரியாக்ஷன்களை குவித்துள்ளது. நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி , மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்கள் உட்பட மற்ற விலங்குகளுக்கும் செறிவூட்டும் நோக்கத்திற்காக பூசணிக்காய் வழங்கப்பட்டது. 347 பவுண்டுகள் (157.3 கிலோ), 364 பவுண்டுகள் (165.1 கிலோ), மற்றும் 576 பவுண்டுகள் (261.2 கிலோ) எடைகொண்ட மூன்று பூசணிக்காய்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பளார்... பாம்பை அடித்து பாடாய் படுத்திய பூனை: அரண்டு போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News