பாம்பு கடித்ததால் விஷமாக மாறியதா தக்காளி? வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

பாம்பு கடித்ததால் தக்காளி விஷமாக மாறியதாக இணையத்தில் வீடியோ பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி உண்மை என்ன? என்பதை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 25, 2024, 10:00 PM IST
  • தக்காளியை கடிக்கும் விஷப்பாம்பு
  • தக்காளி விஷமாக மாறிவிடுமா?
  • உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
பாம்பு கடித்ததால் விஷமாக மாறியதா தக்காளி? வைரலாகும் வீடியோ - உண்மை என்ன? title=

பாம்பு ஒரு மாமிச உண்ணி என்றாலும், அண்மையில் வைரலாகியிருக்கும் வீடியோவில் தக்காளி பழங்களை கடிக்கிறது. இதனால் பாம்பில் இருக்கும் விஷம் தக்காளியில் இறங்கியிருக்கும், இதனை சாப்பிடும் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும் எச்சரிக்கையும் அந்த வீடியோவில் போடப்பட்டுள்ளது. பொதுவாகவே விலங்குகள் கடித்த பழங்கங்களை சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜூனோடிக் என்ற நோய்க்கிருமி விலங்குகள் கடித்த பழத்தில் இருக்கும் என்பதால் அவற்றை மனிதர்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என எச்சரிக்கையும் மருத்துவ நிபுணர்கள் கொடுத்திருக்கின்றனர். 

இந்த சூழலில் தான் தக்காளியை பாம்பு கடிக்கும் வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. ஆனால், இந்த வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் பாம்பு வேண்டுமென்றே தக்காளியை கடிக்கவில்லை. அங்கிருக்கும் ஒரு குச்சியின் அடியில் பாம்பு சிக்கி வலியால் துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஆற்றாமையை பொறுத்துக்கொள்ளவும், கோபத்தை வெளிக்காட்டவும் தக்காளி செடியில் இருக்கும் தக்காளியை பாம்பு தேடிப்பிடித்து கவ்வி கடிக்கிறது. 

இன்னும் அந்த வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், தக்காளி தோட்டத்துக்குள் சென்ற பாம்பை, அந்த தோட்டத்து உரிமையாளர் பார்த்துவிட்டார் போல தெரிகிறது. அவர் தான் அந்த பாம்பை அடிப்பதற்காக ஒரு வலுவான குச்சியை வைத்து அழுத்தி பிடித்திருக்கிறார் என்பதும் தெரிகிறது. பாம்பு உயிரோடு இருக்கும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதால், வலியில் துடிக்கும் அந்த பாம்பு தக்காளி பழத்தை கடித்து கோபத்தை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது. இந்த வீடியோ தான் இப்போது தக்காளியை பாம்பு கடித்து, அதில் விஷமாக மாறிவிட்டதாக கூறி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் படிக்க | நாகப்பாம்பை மாலையாய் போட்ட குரங்கு: ஷாக் ஆன மற்றொரு பாம்பு... வேற லெவல் வைரல் வீடியோ

தக்காளியை பாம்பு கடிக்கும் வைரல் வீடியோ : 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

அதேநேரத்தில் எந்த காய்கறி பழத்தை புதிதாக வாங்கினாலும் அதனை சுத்தமாக கழுவிவிட்டு சமைக்க வேண்டும். ஏனென்றால் காய்கறி பழங்களில் விலங்குகளின் எச்சம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இவை நேரடியாக வயிற்றுக்குள் செல்லும்போது உடல் உபாதைகள் ஏற்படும். பல ஆரோக்கிய பிரச்சனைகளும் உருவாக வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்களும் எச்சரிப்பதால் கவனமாக இருந்து, ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம்.

மேலும் படிக்க | கோபக்கார சிங்கத்தின் அப்பாவி முகம்! இவ்வளவு அப்பாவியா இருந்தா சிங்கம் மேல இருக்க பயமே போயிடும்! வைரல் வீடியோ...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News