பொதுவாக இவ்வுலகில் உணவு என்பதை வெறுக்கும் நபர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அனைவரும் இரவுபகல் பாராது ஓடி உழைப்பதெல்லாம் உணவுக்காக தான். அத்தகைய அத்தியாவசியமான உணவில் பல்வேறு புதுமைகள் வர தொடங்கிவிட்டன. பெரும்பாலானோர் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு இடங்களிலும் கிடைக்கும் புதுவகையான, பாரம்பரியமான உணவுகள் குறித்த வீடியோக்களை பதிவேற்ற தொடங்கிவிட்டனர்.
ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!
மற்ற வீடியோக்களை விட இவ்வாறு பதிவிடப்படும் பல்வேறு உணவுகள் பற்றிய வீடியோக்கள் மக்களின் வரவேற்பை எளிதில் பெற்றுவிடுகிறது. இதற்கென்றே பலரும் வித்தியாசமான உணவுகளை தயார் செய்ய தொடங்கிவிட்டனர். ஐஸ்க்ரீம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் இங்கு தயாரிக்கப்படும் புது வகையான ஐஸ்க்ரீம் வீடியோவை பார்த்தபின் பலருக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடும் எண்ணம் வர வாய்ப்பேயில்லை.
thegreatindianfoodie என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லி ஸ்பெஷல் மசாலா தோசை ஐஸ்க்ரீம் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடைக்காரர் மசாலா தோசையை எடுத்து அதை நன்கு blend செய்கிறார். பின்னர் அதன்மீது ஐஸ்க்ரீமை எடுத்து வைத்து இரண்டு கலவைகளை நன்று மிக்ஸ் செய்கிறார். பின்னர் அவை உறைந்து ஐஸ்க்ரீம் பதத்திற்கு மாறியவுடன் அவற்றை ரோலாக எடுத்து தட்டில் வைத்து அதன் மேல் சிறிது மசாலா வைத்து அதனுடன் இரண்டு வகையான சட்னிக்களையும் வைத்து பரிமாறுகிறார்.
இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஐஸ்க்ரீம் மற்றும் மசாலா தோசை கலந்து உருவான இந்த கலவையை பார்த்த பலரும் இந்த ஐஸ்க்ரீமின் ருசி எப்படி உள்ளது என்றும், இதை எப்படி சாப்பிடுவது என்றும் பல்வாறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR