நடுரோட்டில் சிங்கங்கள் செய்த சில்மிஷம்: வீடியோ வைரல்

Viral Video: விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இங்கு சிங்கக் கூட்டத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 2, 2022, 09:24 AM IST
  • சிங்கங்களின் சில்மிஷ வீடியோ
  • விலங்குகள் தொடர்பான வீடியோ
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
நடுரோட்டில் சிங்கங்கள் செய்த சில்மிஷம்: வீடியோ வைரல் title=

சிங்கங்களின் சில்மிஷ வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அதன்படி சமீப காலங்களில் சிங்கங்களின் செய்யும் சேட்டை வீடியோ வைரலாகி வருகின்றது.  தற்போதும் ஒரு சில்மிஷ வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சிங்கக் கூட்டம் நடுரோட்டில் வேடிக்கையான செயலை செய்துக் கொண்டு உல்லாசமாக இருப்பதை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன. சிங்கத்தைப் பார்த்ததும் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரவசமடைந்தனர்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

முதலில் இரண்டு சிங்கங்கள் நடு ரோட்டில் மந்தமான முறையில் ஓய்வெடுப்பதை வைரலான வீடியோவில் தெளிவாகக் காணலாம். பின்னர் மற்றொரு சிங்கம் அங்கு வருகிறது, மற்ற இரண்டும் சேர்ந்து அதே செயலை செய்ய ஆரம்பிக்கிறது. சிங்கங்களின் இந்த குறும்புகளால், சுற்றுலாப் பயணிகள் ஜங்கிள் சஃபாரிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதையும் நாம் காணலாம். இருப்பினும், சிங்கங்கள் காரணமாக, சஃபாரி பூங்காவின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த வீடியோ தான்சானியாவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோவை இங்கே பார்க்கவும்…

இந்த வீடியோ தற்போது @buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுவரை இந்த வீடியோ 11 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News