Car Accident Viral Video: ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் எல்லாம் நடந்து வந்த கார், பைக் ஸ்டண்ட்கள், தற்போது பரபரப்பான முக்கிய சாலைகளில் நடைபெறுவதை காண்க்கிறோம். இதனால், பலரும் காயமடைவது மட்டுமின்றி தங்கள் உயிரையும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறார்கள்.
பாலங்களில் பைக் வீல்லிங் செய்வது, பெண்கள் முன் 'கெத்து' காட்டுவதாக எண்ணி ஸ்டண்ட் செய்வது, கார்களில் செல்லும்போது ஸ்கிட் செய்வது போன்ற சாகசங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவும் இதுபோன்ற சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொண்டது குறித்துதான்.
Drive safe guys: Live road accident video on Punjab's Nawanshahr-Phagwara National Highway, Swift car crashed into divider while doing stunt on the road. pic.twitter.com/MYs7hjijol
— Tarun (@dreamthatworks) February 16, 2023
அந்த வைரல் வீடியோவில் வரும் ஒரு கார், கவிழ்ந்து சாலை டிவைடரில் மோதியது பதிவாகியுள்ளது. அந்த திகிலூட்டும் வீடியோ, எங்கே எடுக்கப்பட்டது என உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அது பஞ்சாபில் உள்ள நவன்ஷஹர்-பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில் நடந்ததாக சில ட்விட்டர் பயனர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்: மரத்தின் பின் காதல் ஜோடிகள் சில்மிஷம்: வைரல் வீடியோ
ஒரு ட்விட்டர் பயனர் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, ''தோழர்களே, பாதுகாப்பாக ஓட்டுங்கள்: பஞ்சாபின் நவன்ஷஹர்-பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரலை வீடியோ, ஸ்விஃப்ட் கார் சாலையில் ஸ்டண்ட் செய்யும் போது டிவைடரில் மோதியது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
37 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஸ்விஃப்ட் காரை ஓட்டும் நபர், அதனை நெடுஞ்சாலையில் முழு வேகத்தில் ஓட்டுவதைக் காட்டுகிறது. இதனால் அவர், அவரின் காரின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது, மேலும் வாகனம் ஆபத்தான முறையில் சாலையில் ஆடியபடியே செல்கிறது. சில வினாடிகளுக்குப் பிறகு, காரின் டயர் நெடுஞ்சாலையில் வெடித்து, டிவைடரில் கார் மோதியது. கார் கவிழ்ந்து அதன் துண்டுகள் பறந்து செல்வதை வீடியோவில் காணலாம்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ நெட்டிசன்களை கொதிப்படைய வைத்துள்ளது. அதே வேளையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க இளைஞர்கள் ஸ்டண்ட் செய்ய வேண்டாம் என பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
''இந்த பைத்தியக்காரத்தனமான செயல்கள் இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் பரவலாக உள்ளன. இத்தகைய முட்டாள்கள் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு உயிர் அபாயத்தை ஏற்படுத்துகிறார். இதுபோன்ற ஜோக்கர்களை சிறையில் அடைக்க வேண்டும்" என்றார்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் காலியான சாலையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் வெள்ளை டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலாக பரவியது, இது காவல்துறை விசாரணையில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ