கல்யாணமா இருந்தா என்ன, நமக்கு தூக்கம்தான் முக்கியம்: கியூட் மணமகளின் வைரல் வீடியோ

Funny Marriage Video: சிவப்பு நிற திருமண உடையில் தூங்கும் மணமகள் மிகவும் அழகாக இருக்கிறார். இந்த வீடியோவை இணையவாசிகள் மிகவும் விரும்பி பகிர்ந்து வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2022, 05:33 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
கல்யாணமா இருந்தா என்ன, நமக்கு தூக்கம்தான் முக்கியம்: கியூட் மணமகளின் வைரல் வீடியோ title=

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சிறப்பம்சம் வாய்ந்த நிகழ்வு, மறக்க முடியாத அனுபவம். மணமகனும், மணமகளும் தங்கள் திருமண ஏற்பாடுகளை பல மாதங்களுக்கு முன்பே தொடங்குகிறார்கள். இது திருமண நாள் வரை தொடரும். 

மணமகனும் மணமகளும் தங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்த அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மணமகள் தனது திருமண நாளில் ஒவ்வொரு நிமிடமும் எப்படி இருக்க வேண்டும் என திட்டமிடுகிறார். திருமண பந்தலில் நுழைவது முதல் நடனம், உடை வரை அனைத்துமே மணமகளால் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன. 

திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன. 

திருமண நாளில் தூங்கிப்போன மணப்பெண் 
இவ்வளவு திட்டமிடலுக்குப் பிறகும், ஒரு மணமகள் தனது திருமண நாளில் தூங்கி விட்டால் என்ன நடக்கும்? இந்நாட்களில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு மணமகள் தனது திருமணத்தில் தூங்குவதைக் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | மணமகளின் வேற வெவல் மாஸ் எண்ட்ரி: முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி, வைரல் வீடியோ 

மணமகள் தூங்குவதையும், புரோகிதர் அனைத்து சடங்குகளையும் செய்து முடிக்க தொடர்ந்து அவரை அழைப்பதையும் விடியோவில் காண முடிகின்றது. ஆனால், மணமகளோ இவை எதையும் காதில் வாங்காமல் ஒய்யாரமாக உறங்கிக்கொண்டிருக்கிறார். 

மணமகள் தனது திருமணத்திலேயே எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக தூங்குவதை வீடியோவில் காண முடிகிறது. மணமகளின் இந்த அழகான உறக்கத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இணையவாசிகளும் வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். 

பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. ஏராளமான நெட்டிசன்கள் இந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர். மணமகன் ஊர்வலம் திருமண மேடையை அடைந்துவிட்டதையும், மணமகன் மணமகளுக்காக மண்டபத்தில் காத்திருப்பதையும் வீடியோவில் காணலாம். 

மணமகள் திருமணத்தில் தூங்கிப்போன வீடியோவை இங்கே காணலாம்: 

சலனமில்லாமல் தூங்கும் மணமகள்
மறுபுறம், மணமகள், நடப்பது எதையும் அறியாமல், மிகவும் மகிழ்ச்சியாக சலனமில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கிறார். அசதியாக இருக்கும் மணமகள் நிம்மதியாக தூங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. 

சிவப்பு நிற திருமண உடையில் தூங்கும் மணமகள் மிகவும் அழகாக இருக்கிறார். இந்த வீடியோ witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இணையவாசிகள் மிகவும் விரும்பி பகிர்ந்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | மணமேடையில் மணமகன் செய்த வேலையால் குஷியான மணப்பெண்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News